IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தமிழகமெங்கும் குவிந்த மக்கள் – அதிகாரிகள் எச்சரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

கொரனோ வைரஸிற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் கடந்த ஐந்து நாள்களாக வீட்டை விட்டு வெளியே வராத மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன், மட்டன், சிக்கன் வாங்க கடைகளில் குவிந்துவிட்டனர்.

அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பல இடங்களில் மக்களை எச்சரிக்கை செய்தனர். ஆம்பூரில் மீன், மட்டன் விற்பனை செய்யும் 7 கடைகளை வட்டாச்சியர் மூடி சீல் வைத்தார்.

கூட்டத்தை கட்டுப்படுத்தி சமூக விலகலை உறுதிப்படுத்தாத கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சேலத்தில் 27 ஆட்டிறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் அதிகளவு கூடியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கோவை மாநகரில் தடை உத்தரவை மீறியதாக 79 பேர் கைது செய்யப்பட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More