IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கோட் சூட்டில் பட்டையை கிளம்பும் பன்னீர் செல்வம்

0 115

அமெரிக்கா சென்ற துணை முதல்வர் பன்னீர் செல்வம் கோட் சூட்டில் பட்டையை கிளப்பும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று அமெரிக்காவின் சிகாகோ ஏர்போட்டில் வந்திறங்கினார். விமானத்தில் இருந்து வந்திறங்கிய ஓ.பி.எஸ். வேஷ்டி சட்டையில் வந்தவுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் ஓய்வு அறையிலிருந்து வெளியே வந்தவர் கோட் சூட்டில் அவர் தங்கும் ஹோட்டலுக்கு காரில் புறப்பட்டு சென்றார். முதல்வர் எடப்பாடியும் அமெரிக்கா சென்றிருந்த போது கோட் சூட்டில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது துணை முதல்வரும் அமெரிக்க சென்றவுடன் கோட் சூட்டில் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழகத்திற்கு வருவாய் ஈட்ட முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு பயணம் சென்று வந்திருந்த சூழ்நிலையில், தற்போது துணை முதல்வரும் அரசுமுறை பயணமாக சென்றிருப்பது எதற்காக என்பது போல சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.