IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிரசவம் பார்க்க தெரியாமல் மனைவியை கொன்னுட்டாங்க! நர்ஸ்கள் மீது புகார் செய்த கணவன்!!

11

பிரசவம் பார்க்க வந்த பெண்ணை நர்ஸ்கள் சேர்ந்து பிரசவம் பார்க்க தெரியாமல் கொலை செய்ததாக அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மதுரை புத்தூர் இ.எம்.ஜி. நகரை சேர்ந்தவர் மணி (வயது 29). இவர் தச்சு தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி சக்திகாளி (வயது 22). இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து சக்திகாளி கர்ப்பம் ஆனார். இதையொட்டி அங்குள்ள மருத்துவமனையில் வழக்கமாக உடல் பரிசோதனை செய்து வந்தார்.

24 பெண்களுடன் உல்லாசமாக இருந்த எஸ்.ஐ.


இந்நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில் பிரசவ வலி வந்துள்ளது. அதனால் சக்திகாளியை புதூர் மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். இரவு 8 மணிக்கு குழந்தை பிறந்துவிடும் என டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அதிகாலை 2 மணி வரை குழந்தை பிறக்கவில்லை. இதனால் மணிமுத்துவின் உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என முடிவு செய்தனர். ஆனால் இதனை மருத்துவமனையில் இருந்த நரசுகள் ஏற்காமல் தொடர்ந்து சிகிச்சை கொடுத்துள்ளனர். இங்கிருந்து சக்திகாளியை அழைத்துச் செல்வது தாய் மற்றும் சேயின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று கூறியிருக்கிறார்கள்.


இதையடுத்து பெரிய ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் முடிவு கைவிடப்பட்டது. தொடர்ந்து நர்சுகள் சிகிச்சை அளித்து வந்தனர். சிறிது நேரத்தில் சக்திகாளிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் சக்திகாளி இறந்து விட்டார். குழந்தையும் தாயின் வயிற்றிலேயே இறந்து விட்டது.


இதுபற்றி தகவல் அறிந்ததும் கணவன் மணிமுத்து மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனையில் இருந்து சிகிச்சை அளித்த நர்சுகளிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் தனது மனைவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று மணிமுத்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். மணிமுத்து அளித்த புகாரில் இரவுப் பணியில் டாக்டர்கள் யாரும் இல்லை. நரசுகள் மட்டுமே இருந்தார்கள். பிரசவம் பார்க்கத் தெரியாமல் நர்சுகள் தவறான சிகிச்சை அளித்ததால் என் மனைவி இறந்து விட்டார். அவரது வாயிலும் காயம் உள்ளது, என தெரிவித்துள்ளார்.


இது குறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் ராஜின் உத்தரவுபடி புதூர் மாநகராட்சி மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களிடம் உதவி நகர்நல அலுவலர் விசாரணை நடத்தினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

#madurai #delivery #women #dead