யார் தடுத்தாலும் வேல் யாத்திரையை நிறுத்த முடியாது – குஷ்பு

Get real time updates directly on you device, subscribe now.

இன்று கடலூரில் நடைபெற உள்ள வேல் யாத்திரிக்கையில் பங்கு கொள்வதற்காக நடிகையும் பாஜக பிரபலமான குஷ்பு தனது காரின் மூலம் சென்னையிலிருந்து கடலூர் புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது கார் செங்கல்பட்டு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கார் விபத்துக்குள்ளானதை அடுத்து குஷ்புவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தான் நலமாக இருப்பதாகவும் தனது வேல் யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் வேறொரு காரில் தான் கடலூருக்கு சென்று கொண்டிருப்பதாகவும் டுவிட்டரில் குஷ்பு பதிவு செய்துள்ளார்.

மேலும் தன்னுடைய கார் சரியான பாதையில் தான் கொண்டிருந்ததாகவும் திடீரென கண்டெய்னர் லாரி எப்படி எங்கள் காரில் மோதியது என்று தெரியவில்லை. இதுகுறித்து கண்டெய்னர் லாரி டிரைவரிடம் போலீசார் விசாரித்து வருவதாகவும் டுவிட்டரில் தெரிவித்தார்.

மேலும் தனது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் அனைவருக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று குஷ்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More