IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நான் திருமணம் செய்தது சிறந்த பேட்ஸ்மேனை அல்ல! , சிறந்த மனிதரை!! – அனுஷ்கா சர்மா

Get real time updates directly on you device, subscribe now.

தான் உலகின் சிறந்த மனிதனைத் திருமணம் செய்துள்ளதாக பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்தார்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

 

இருவருக்கும் இடையே உள்ள காதலை தெரிவிக்கும் வண்ணம் இருவரும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்தும் வருகின்றனர்.

 

சமீபத்தில் `சுய் தாகா’ என்ற படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அனுஷ்கா சர்மா கலந்துகொண்டார். அப்போது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர், உலகின் சிறந்த பேட்ஸ்மேனை மணந்திருக்கும் அனுஷ்கா சர்மா என்று அறிமுகப்படுத்தினார்.

 

அப்போது அவரைத் திருத்திய சர்மா “நான் உலகின் சிறந்த மனிதனை மணமுடித்திருக்கிறேன்” என்று பேசினார். அனுஷ்கா சர்மா நடித்திருக்கும் `சுய் தாகா’ படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளிவருகிறது.

 

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருவதால் கோலி தற்போது இங்கிலாந்தில் உள்ளார்.

 

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் டிசம்பர் மாதம், 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர்.

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader