IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நோக்கியா 3310 மொபைலுக்கு வயசு 20 ! சிறப்பு பகிர்வு

Get real time updates directly on you device, subscribe now.

உலகின் மிகப் பிரபலமான நோக்கியா 3310 மாடல் மொபைல் அறிமுகமாகி செப்டம்பர் மாதத்தோடு 20 வருடங்கள் ஆகின்றன.

செப்டம்பர் 1, 2000 அன்று நோக்கியா 3310 அறிமுகம் செய்யப்பட்டது.

அடர் நீல நிறத்தில், பச்சை ஒளித் திரையில் இருந்த இந்த மொபைலில் ஸ்னேக் என்கிற விளையாட்டு நம்மவர்களுக்கு மிகவும் பரீட்சையமானது.

எந்த ஒரு போட்டியாளும் இல்லாத நோக்கியாவின் பொற்காலம் அது.

2016-ம் ஆண்டு, ஹெச்.எம்.டி க்ளோபல் என்கிற நிறுவனம், அடுத்த பத்து வருடங்களுக்கு நோக்கியா பிராண்ட் கருவிகளை விற்கும் உரிமத்தைப் பெற்றது.

The Global System for Mobile Communications தொழில்நுட்பத்தை கொண்ட இந்த மொபைல், 133 கிராம் எடை கொண்டது.

Monochrome graphic எனப்படும் கருப்பு வெள்ளை டிஸ்ப்ளே கொண்ட, நோக்கியா 3310, நான்கு வீடியோ கேம்களை கொண்டது.

அதாவது, Snake II, Pairs II, Space Impact, Bantumi ஆகிய கேம்கள் இன்றளவும் பயனர்களால் நினைவுகூரப்படுகிறது.

900 mAh battery பவர் கொண்ட இந்த மொபைலில் 2 h 30 min to 4 h 30 வரை பேசலாம்.
பிரபல தொழில்நுட்ப வல்லுநரான வாலா அஃப்ஸர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நோக்கியா 3310 மிகச் சிறப்பாக விற்பனையானது. கிட்டத்தட்ட 12.6 கோடி மொபைல்கள் சர்வதேச அளவில் விற்பனையாகின.

நோக்கியாவின் மறக்க முடியாத சாதனங்களில் ஒன்றானது. இன்றும் கூட இந்த மொபைலுக்குப் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நிலைத்து நிற்கக்கூடிய இதன் வலிமைக்காகப் பெயர் பெற்றுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இன்னும் பல பயனர்களும் நோக்கியா 3310-ஐ மறக்க முடியாது என்று பகிர்ந்துள்ளனர்.

மேலும் 3310-ல் எஸ்.எம்.எஸ், அழைப்புகள், கால்குலேட்டர் உள்ளிட்ட வசதிகள் இருந்தன.

கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3310 என்கிற விலையில் இந்தியச் சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வந்தது.

இம்முறை நான்கு வண்ணங்களில் வந்த இந்தக் கருவியில் இரண்டு சிம்கள் பொருத்தக்கூடிய வசதியும், மைக்ரோ எஸ்டி மெமரி கார்ட் பொருத்தக்கூடிய வசதியும், 2ஜி இணைய வசதியும் சேர்க்கப்பட்டிருந்தது.

1200 எம்ஏஹெச் பேட்டரியின் மூலம் 22 மணி நேரங்கள் பேச முடியும், ஒரு மாதம் வரை நீடித்து நிற்கும் என்றும் கூறப்பட்டது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader