இந்தியாவில் நோக்கியா 5310 அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

நோக்கியா கைபேசிகளின் தாய் நிறுவனமான ஹெச்எம்டி குளோபல் நோக்கியா 5310 கைபேசியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரிஜினல் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் மறுவடிவமாக உருவாக்கப்பட்டுள்ள நோக்கியா 5310 கைபேசியில் எம்பி3 பிளேயர்I, எஃப்எம் வானொலி (வயர் மற்றும் வயர்லெஸ்), ட்யூயல் ஃப்ரண்ட்-ஃபேசிங்க் ஸ்பீக்கர்ஸ் ஆகியவை பயணிக்கும் போதும் பிடித்தமான இசையைக் கேட்க உதவும்.

அமேசான்.இன் தளத்தில் ஜூன் 16 தொடங்கி நோக்கியா.காம் / ஃபோன் அல்லது நோடிஃபை-மீ-இல் நோக்கியா 5310 முன்பதிவு தொடங்குகிறது. முதல் நான்கு வாரங்களுக்கு ஆன்லைனில் கிடைக்கும் நோக்கியா 5310 கைபேசியைப் பின்னர் இந்தியா முழுவதும் அனைத்து சில்லரைக் கடைக்களிலும் வாங்கலாம். நோக்கியா 5310 கைபேசி இந்தியாவில் வொயிட் / ரெட் மற்றும் பிளாக் / ரெட் வண்ணங்களில் ட்யூயல் சிம் வேரியண்டில் பரிந்துரைக்கப்பட்ட ரூ.3399/- விலைக்குக் கிடைக்கும்.

இது குறிப்பாக ஹெச்எம்டி குளோபல் முதன்மைப் பொருள் அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் கூறுகையில் ‘ஒரிஜினல்ஸ் குடும்பத்துக்குப் புத்துணர்வு அளிக்கும் எங்கள் முனைவுக்கு ரசிகர்கள் இடையே மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. எங்களது அனைத்து ஒரிஜினல்ஸ் குடும்பத்துக்கும் ஒட்டு மொத்த ஆக்கப்பூர்வ ஆதரவு கிடைத்துள்ளது.

எங்களது சமீபத்திய ஒரிஜினல்ஸ் குடும்ப உறுப்பினரான நோக்கியா 5310 மூலம் இந்தப் போக்கைத் தக்க வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். ’ என்றார்.ஹெச்எம்டி குளோபல் துணைத் தலைவர் சன்மீத் சிங்க் பேசுகையில் ‘எங்கள் இதயத்திலும், ரசிகர்கள் இதயத்திலும் இருப்பதைப்போல், எங்கள் பொருள்கள் பட்டியலில் ஒரிஜினல்ஸுக்கு எப்போதுமே பிரத்யேக இடமுண்டு. தற்போது மறுவடிவமாகக்கப்பட்ட ஒரிஜினல் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் மூலம் இந்தியாவுக்கு வித்தியாசமான பொருளை அறிமுகப்படுத்துகிறோம்’ என்றார்.

அமேசான் இந்தியா கைபேசிகள் பிரிவு தலைவர் நிஷாந்த் சர்தானா கூறுகையில் ‘ஹெச்எம்டி குளோபல் விரும்பும் கூட்டாளியாகத் தொடர்ந்து இருப்பதிலும் புதிய நோக்கியா 5310 கைபேசியை வாடிக்கையாளர்களுக்கு அமேசான்.இன் தளம் மூலம் அறிமுகப்படுத்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம்.

நம்பிக்கையான பிராண்ட் மூலம் ஒரு நம்பகத்தன்மை கொண்ட கைபேசியை எதிர்பார்க்கும் இசை ஆர்வலர்களின் விருப்பத்தை நிறைவு செய்ய உறுதியளிக்கும். இந்த அறிமுகம் மூலம் கைபேசி பிரிவில் வலுவான பொருள் பட்டியலை ஈடு இணையற்ற மதிப்புடன், வேகம், நம்பகத்தன்மை மற்றும் மிகப் பெரிய ஷாப்பிங்க் அனுபவத்தையும் வழங்கத் தொடர்ந்து முனைந்து வருகிறோம்’ என்றார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More