IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இதய துடிப்பு மற்றும் உறக்கத்தை டிராக் செய்யும் வசதியுடன் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

0 61

ஸ்மார்ட் போன் உபகரணங்களை தயாரிக்கும் பிரபல நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. கலர் ஃபிட் பிரோ 2 என்ற பெயரில் அறிமுகமாகிய ஸ்மார்ட் வாட்ச் கடந்த ஆண்டு நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த கலர்ஃபிட் ப்ரோ மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய நாய்ஸ் கலர்ஃபிட் பிரோ 2 மாடலில் 1.3 இன்ச் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் டைனமிக் வாட்ச் பேஸ்கள் இடம் பெற்றிருக்கின்றன. இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, மேம்பட்ட பீடோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வாட்ச் மாடலின் மேம்படுத்தப்பட்ட அனுகூலமாக இதய துடிப்பு ஆர்க்கியம், உறக்கம் போன்றவற்றை டிராக் செய்யும் வசதி போன்றவற்றை கொண்டிருக்கும்.

நாய்ஸ் கலர்ஃபிட் பிரோ 2வின் சிறப்பம்சங்கள்

  • 1.3 இன்ச் 240×240 பிக்சல் எல்.சி.டி. டச் ஸ்கிரீன்
  • ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் பயன்படுத்தும் வசதி
  • இதய துடிப்பு ஆரோக்கியத்தை டிராக் செய்யும் வசதி
  • உறக்கத்தை டிராக் செய்யும் வசதி
  • அழைப்புகள், டெக்ஸ்ட் என அனைத்து ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன்
  • எடை: 35 கிராம்
  • வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
  • ஏழு முதல் பத்து நாட்களுக்கான பேட்டரி
  • 45 நாட்கள் ஸ்டான்ட்-பை

நாய்ஸ் கலர்ஃபிட் பிரோ 2 ஸ்மார்ட் வாட்ச் ஜெட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் அதிகபட்ச விலையாக ரூ.2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையானது இன்று (அக்டோபர் 15) முதல் தொடங்குகிறது. ஜெட் பிளாக் தவிர மிஸ்ட் கிரே மற்றும் டீர் கிரீன் போன்ற நிறங்களில் புதிய ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.