IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காஷ்மீரைப் பற்றி நினைத்தால் பாகிஸ்தான் இரண்டாக உடைக்கப்படும் – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

0 43

காஷ்மீரை பற்றி மறந்துவிடுங்கள். இல்லையெனில் பாகிஸ்தான் இரண்டாக உடைக்கப்படும் என பாகிஸ்தானுக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹரியானா மாநிலம் சட்டப் பேரவைக்கு வருகின்ற அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதற்காக கர்ணால் என்ற இடத்தில் பாஜக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது,

வளைகுடா பகுதியில் பதற்றத்தை குறைக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஈரான் சென்றுள்ளார். ஆனால் இந்தியாவுக்கு எதிராக தீவரவாதத்தை பாகிஸ்தான் தூண்டிவிடுகிறது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை பாகிஸ்தான் தங்கள் நாட்டில் ஊக்குவித்து வருகிறது. உண்மையிலேயே தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் விரும்பினால் உங்களுக்கு உதவ இந்தியா தயாராக இருக்கிறது.

தீவிரவாதத்தை ஒழிக்க இம்ரான்கான் விரும்பி இந்தியாவிடம் உதவி கோரினால், பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவப்படையை அனுப்ப தயாராக இருக்கிறோம்.

காஷ்மீர் சுதந்திரம் அடையும்வரை தொடர்ந்து போராடுவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். காஷ்மீரை பற்றி நீங்கள் மறந்துவிடுங்கள். காஷ்மீரை பற்றி யோசிக்கவும் கூடாது. மீறினால் பாகிஸ்தான் இரண்டாக பிரிக்கப்படும் என்றும் ராஜ்நாத்சிங் பேசினார்.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒருபகுதி. இதில் எந்தவகையான மாற்றுக்கருத்தும் இல்லை. இதுதொடர்பாக வேறு எந்த நாடும் இந்தியாவிற்கு அழுத்தம் தரமுடியாது. 1947ல் இந்தியாவை இரண்டாகப் பிரித்து காஷ்மீர் உருவானது. ஆனால் 1971ல் பாகிஸ்தானே இரண்டானது.

காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மறந்து தன் பணியை தொடர வேண்டும். காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் இதே நிலைமையை தொடர்ந்தால் மீண்டும் பாகிஸ்தான் இரண்டாக உடைவதை யாராலும் தடுக்க முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
#RajnathSingh #Kashmir #Warn #ImranKhan #In4Net