IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

காசு கொடுத்தால் தான் தண்ணீர் தருவார்களாம்! ஆளுநர் மாளிகைக்கு சென்று புகாரளித்த வாடிக்கையாளர்

Get real time updates directly on you device, subscribe now.

வாடிக்கையாளருக்கு குடிநீர் தர மறுத்த பிரபல பீட்சா நிறுவனம் குறித்து வாடிக்கையாளர் ஒருவர் புதுச்சேரி துணை நிலை ஆளநர் மாளிகையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பிரபல டோமினாஸ் பீட்சா நிறுவனம் புதுச்சேரியில் தனது கிளை மிஷன் வீதி – ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் செயல்பட்டு வருகிறது. அங்கு வாடிக்கையாளர் ஒருவர் பீட்சா வாங்குவதற்காக சென்றுள்ளார். சென்ற வாடிக்கையாளருக்கு தாகம் எடுத்தவுடன் பீட்சா நிறுவன பணியாளரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுத்து தான் தண்ணீர் வாங்க முடியும் என்று சொல்லி இலவசமாக தண்ணீர் இல்லை என்று சொல்லிவிட்டார்.

வழமையாக உணவகங்களில் இலவசமாக குடிக்க தண்ணீர் வைக்க வேண்டும் என்பது கடமை என்று அறிவுறுத்தியும் பணத்திற்காக தண்ணீர் தர மறுத்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து, “விருப்பமில்லாவிட்டால் பீட்சா ஆர்டரை ரத்து செய்து விடுங்கள்” என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அதனால் வாடிக்கையாளர், ஆளுநர் மாளிகைக்கு சென்று புகார் பிரிவை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை அடுத்து இன்று முதல் இலவசமாக தண்ணீர் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#pondicherry #dominospizza #puducherry #waterissue #nodrinkingwater #in4net

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader