IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நோய் அறிகுறி இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவலாம்! அதிர்ச்சியில் மருத்துவத் துறை

Get real time updates directly on you device, subscribe now.

கேரளாவில் 19 நாட்களாக எந்தவொரு நோய் அறிகுறியும் இல்லாத மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பது மருத்துவ துறையை அதிரச் செய்துள்ளது.

உலக நாடுகள் முழுவதும் பரவி கடும் உயிர் பலியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4500 ஐ எட்டுகிறது. 114 பேர் பலியாகி இருக்கின்றனர். 326 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லியில் படித்துக் கொண்டிருந்த கேரள மாணவி ஒருவர், சொந்த ஊரான பத்தனம் திட்டாவுக்கு கடந்த மாதம் 17ம் தேதி வந்தார். கொரோனா ஊரடங்குக்கு முன்பே சொந்த ஊர் வந்த போதிலும், அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

19 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனை முடிவுகள் மருத்துவ உலகையே அதிர வைத்துள்ளது. சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன. பொதுவாக இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட 14 நாட்களில் அறிகுறிகள் தென்படும். அதை மனதில் கொண்டு தான் மருத்துவர்கள் சிகிச்சை தருகின்றனர்.

ஆனால் 19 நாட்களாக எந்த அறிகுறியும் தென்படாத அந்த மாணவிக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டதை கண்ட மருத்துவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader