IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

என் மீது குற்றம் சொல்பவர்கள் முட்டாள்கள், நானே மனிதத்தின் எதிர்காலம் – நித்தியானந்தா

Get real time updates directly on you device, subscribe now.

தன் மீது குற்றம் சுமத்தி வருபவர்கள் முட்டாள்கள் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். எப்போதும் கூறுவதைப் போல் சமூக வலைதளத்தின் மூலம் தாமே மனித இனத்தின் எதிர்காலம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் தேடிய நித்தியானந்தா கைலாசாவில் இருக்கிறார். ஆனால் அந்த கைலாசம் எங்கு இருக்கிறது ? அது தனிநாடா அல்லது தீவா என்பது குறித்தான பதில்கள் மத்திய அரசிடம் இல்லை. உலகம் முழுவதும் பற்றிய கேள்விகளுக்கு விடை அளிக்கும் கூகுளிடம் நித்தியானந்தாவின் கைலாசம் எங்கு இருக்கிறது என கேள்வி கேட்டால் கூகுளே குழப்பதில் பதிலளிக்க முடியவில்லை.

வருகின்ற 12ம் தேதிக்குள் நித்தியானந்தாவை நேரில் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு பெங்களூர் காவல்துறைக்கு அம்மாநில கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதனால் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் போலீசார் குழப்பத்தில் இருக்க, ஆனால் நித்தியோ கூலாக யூடியுப் வழியாக தனது சீடர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு நடத்துகிறார்.

நித்தியானந்தா அந்த வீடியோவில், எனது சீடர்கள் என்னை நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தை சுற்றி வருகின்றனர். உண்மையான கைலாசத்தை நான் உருவாக்குகிறேன். எனது உடலை பயன்படுத்தி சிவபெருமான் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.

இதற்காக E-ஸ்ரீகைலாசா திட்டத்தை உருவாக்குகிறோம். கைலாசம் உரக மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கைலாசா இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. கைலாசா என்பத எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி. இங்கு உங்களது செல்லப் பிராணிகளுக்காகவும் விண்ணப்பிக்கலாம். அவற்றிற்கும் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் நம் மீது பழி சுமத்துப்படும் போது நாம் நேர்மையானவர்கள் என மெய்ப்பிக்கிறோம். அதன் மூலம் நமது புகழ் உயருகிறது. மேலும் மேலும் பலர் நம் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். கைலாசா மீது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒருவரை தாக்குபவர்கள் சரித்திரம் படைக்க மாட்டார்கள். தாக்குதலை எதிர் கொள்பவர்தான் வரலாறு படைப்பார்கள். என் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள். நானே மனிதத்தின் எதிர்காலம் என அந்த வீடியோவில் பேசியுள்ளார் நித்தியானந்தா.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader