IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தேடி அலையும் போலீசார் – தொடவே முடியாத தூரத்தில் பதுங்கிய நித்தியானந்தா

182


ஓயாத பிரச்சனைகள் தன்னை சுற்றிவந்தாலும் சளைக்காமல் அனைத்தையும் சமாளிக்கும் நித்தியானந்தா, சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் தலைமறைவாகி உள்ளார். பெங்களூர் அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தாவிற்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கிளைகள் உண்டு.

நித்தியானந்தாவின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக செல்வாக்கு மிகுந்தவராக இருந்த ஜனார்த்தன சர்மா. இவர் தற்போது தனது மகளை சந்தி்க்க வேண்டும் எனச் சொல்லி நித்தியானந்தா ஆசிரமத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் அஹமதாபாத் ஹத்திஜன் பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆசிரமம். நித்தியானந்தாவின் நேரடி பார்வையில் நியமிக்கப்பட்டுள்ள 50ற்கும் மேற்பட்ட சிறுகுழந்தைகள் அடைத்து வைத்து கொடுமைப்டுத்துவதாக பகீர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

தனது 3 மகள்களில் இருவரை மீட்டுள்ள நிலையில், ஒரு மகளை நித்யானந்தா, அவரது ஆசிரமவாசிகள் கடத்திவிட்டதாக புகார் அளித்தார். விசாரனையை தொடங்கிய போலீசார், நித்தியின் ஆசிரமத்திற்குள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பிரச்சனை பெரிதாகவே சர்மாவின் 3வது மகளை மட்டும் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ப்ராணப் பிரியா, பிரிய தத்துவா என்ற ஆசிரம நிர்வாகிகளை கைது செய்துள்ளனர். இருப்பினும் நித்தியானந்தா எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து தெரியாது என தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு பிடதி ஆசிரமத்திலிருந்து ரகசியமாக கிளம்பிய நித்யானந்தா, தனது மகளை கடத்திச்சென்றுள்ளதாக சர்மா குற்றம் சாட்டுகிறார். தலைமறைவான நித்தியானந்தாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அவர் இமயமலையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நித்தியானந்தா தனது சமூக வலைதளங்த்தில் தான் எங்கு ஓடி ஒழியவில்லை. இமயமலையில் தங்கியிருப்பதாகவும் தன்னை யாராலும் தொடவே முடியாது என்றார். போலீசார் நித்தியை கைது செய்து விசாரிக்கும் போதுதான் உண்மை நிலவரம் வெளிவரும் என்கின்றனர் போலீசார்.