IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நித்தியானந்தாவின் கைலாச நிதி ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

போலீசாரால் தேடப்படும் நித்தியானந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் .. கைலாசாவுக்கான மொத்தப் பொருளாதாரம், பொருளாதாரக் கொள்கைகளும் தயார். 300 பக்க ஆவணத்தை தயாரித்துள்ளோம்.

கைலாசாவுக்கான தனி பணம், அதற்கான கொள்கை, உள்ளூர் பணப் பரிமாற்றம், வெளிநாடுகளுடனான பணப் பரிமாற்றம் உள்ளிட்டவைகள் குறித்தான விதிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. வாடிகன் வங்கியை உதாரணமாகக் கொண்டு கைலாசா ரிசர்வ் வங்கியை உருவாக்கியுள்ளோம்.

கரன்சி வடிவமைப்பு முதல் அனைத்தும் முடிந்துவிட்டன. இது குறித்தான அனைத்து ஆவணங்களும் சட்டப்பூர்வமாக தயாரிக்கப்பட்டுவிட்டன. அதிலும் வரும் விநாயகர் சதுர்த்தியன்று கைலாசாவிற்கென உருவாக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கி மற்றும் கரன்சிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறி அதிரவைத்திருக்கிறார்.

வாடிகன் வங்கியை மையமாக கொண்டு தன்னுடைய ரிசர்வ் பேங்க் செயல்படும் என்றும் நித்தியானந்தா கூறியிருக்கிறார். அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டன என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader