IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஈக்குவடார் அருகே புதிய நாடு – அதிபர் நித்தி ; பிரதமர் ரஞ்சிதா

Get real time updates directly on you device, subscribe now.

ஈக்குவடார் அருகே கைலாசம் என்ற பெயரில் சுவாமி நித்தியானந்தா, தனி நாடு, கொடி, பாஸ்போர்ட் என பலவற்றை உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

குழந்தைகள் கடத்தல் புகாரில் சிக்கியுள்ள சுவாமி நித்தியானந்தா, தற்போது ஈக்குவடார் அருகே ஒரு தனி தீவை வாங்கி தஞ்சமடைந்துள்ளார்.

அந்த தீவை இந்துக்கள் வாழக்கூடிய தனிநாடாக மாற்றியுள்ளார். கைலாசம் என பெயரிட்ட இணையதளத்தில் கைலாச நாடு பற்றி, தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை நம்பிக்கையுடன் கடைபிடிக்கும் உரிமையை இழந்து உலகமெங்கும் வாழ்கிற இந்துக்களால் உருவாக்கப்பட்ட எல்லைகளற்ற நாடு என கூறப்பட்டுள்ளது.

மேலும் தன்னுடைய நாட்டிற்கென தனிக் கொடி, சின்னம், பாஸ் போர்ட் என பலவற்றையும் அறிவித்துள்ளார்.

இந்தநாட்டிற்கு நித்தியானந்தா அதிபராகவும் ரஞ்சிதா பிரதமராகவும் இருப்பார்கள் என்ற ஒரு தகவலும் சமூக ஊடகங்களில் கசிந்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader