IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அமைச்சர் உதயகுமார் இருக்கும்வரை நிர்மலாதேவிக்கு நீதி கிடைக்காது! வழக்கறிஞர் பேட்டி முழுவிபரம்

161

அமைச்சர் உதயகுமார் இருக்கும் வரை பேராசிரியை நிர்மலாதேவிக்கு நீதி கிடைக்காது எனவும், தீர்ப்பு எழுதி வைக்கப்பட்டு தான் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இவ்வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி தொடர்புடைய வழக்கில், முதலில் வழக்கறிஞர் மகாலிங்கம் என்பவர் ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார். பின்னர் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இந்த வழக்கை நடத்தி வருகிறார். நிர்மலா தேவிக்கு ஜாமீன் பெற்றுக்கொடுத்த இவர் தற்போது இவ்வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்த நிர்மலாதேவி தரப்பு வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:
கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த நிர்மலாதேவிக்கு கடும் சட்டப்போராட்டம், நெருக்கடிக்கு இடையே ஜாமீன் பெற்றுக்கொடுத்தேன். அவருக்கு அரசு தரப்பு நெருக்கடி இருப்பது உண்மை தான்.. நிர்மலாதேவிக்காக அவரது கணவன், மகன், உறவினர்கள் என யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நிர்மலாதேவியுமே ஒத்துழைப்பு தர மறுக்கிறார்.

இது குறித்து கேட்டால் வழக்கின் உண்மைகள் குறித்தும் வெளியே சொன்னால் உனது மகளை கடத்தி விடுவோம் என வருவாய்த்துறை அமைச்சர் தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததாகவும் தெரிவித்தார்.

Related Posts
1 of 6

இவ்வி~யத்தில் ஆளுனரும், அமைச்சரும், உயர் அதிகாரிகளும் தொடர்பில் இருக்கின்றனர். ஆனால் நிர்மலாதேவியை மட்டும் குற்றவாளியாக்கி, தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்ப அரசு செயல்பட்டு வருகிறது. இவ்விவகாரத்தில் அம்பு மட்டும் தான் நிர்மலா தேவி. எய்தவர் யார் என்பது தான் எனது கேள்வி.

தீர்ப்பு எழுதி வைக்கப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. கவர்னரையும், அமைச்சரையும் காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது. உச்ச நீதிமன்றத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ வழக்கினை விசாரித்தால் நியாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இந்த ஆட்சி இருக்கும் வரையும், அமைச்சர் உதயகுமார் மற்றும் இந்த கவர்னர் இருக்கும் வரை இவ்வழக்கில் நீதி, நியாயம் கிடைக்காது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இவ்வழக்கில் மீண்டும் புலன் விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும்.

மேலும், மிரட்டல் காரணமாக நிர்மலா தேவி வாய்மூடி மவுனமாக இருப்பதால், வழக்கு நேர்மையாக நடக்காமல் திசை மாற வாய்ப்புள்ளதால், நேர்மைக்கு மாறாக தாம் செயல்பட விரும்பாத காரணத்தால்; இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

#Nirmaladevi #Case #Udayakumar #Full #interview #lawyer