IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

திருச்சியில் நிப்பான் மேட்டெக்ஸ் ஈஸி வாஷ் எமல்சன் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.


நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், (அலங்கார பிரிவு) ஆசியாவிலேயே சிறந்த பெயிண்ட் உற்பத்தி நிறுவனம். இந்நிறுவனம் மேட்டெக்ஸ் ஈஸி வாஷ் பெயிண்டை திருச்சியில் அறிமுகம் செய்துள்ளது. இது உங்களின் கனவு இல்லங்களின் உட்புறச் சுவர்களை அலங்கரிக்கும் எமல்சன் வகையைச் சேர்ந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இந்த ரக எமல்சனைப் பூசினால் சுவற்றை கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம்.

இந்த பெயிண்டை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க தயாரித்துள்ளோம். இதன் ஆயுள்காலம் 3 ஆண்டுகள். அந்த மூன்று ஆண்டுகளில் இந்த ரக எமல்சன் பூசப்பட்ட சுவரை வாடிக்கையாளர்கள் 1000 முறையாவது கழுவி சுத்தம் செய்துகொள்ளலாம். இத்துடன் மேட்டெக்ஸ் ஈஸி வாஷ் -ல் நறுமணம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் உங்களின் வசிப்பிடம் மணம் கமழ்வதாக இருப்பதோம் இதமான சூழலை மனதுக்கு தரும்.

இந்த புத்தாக்க அம்சங்களுடனான பெயிண்டை நிப்பான் பெயிண்ட் இந்தியாவின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் மார்க் டைட்டஸ் அறிமுகப்படுத்தினார். பல்வேறு கட்ட கடினமான சோதனைகளுக்குப் பின்னர் நிப்பான் பெயிண்ட்ஸின் ரிசேர்ச் மற்றும் டெவலப்மெண்ட் (ஆராய்ச்சி மற்று மேம்பாட்டுக் குழு) இந்தத் தயாரிப்பை உருவாக்கியுள்ளது.

சந்தையில் இத்தகைய பெயிண்டின் தேவையை வலியுறுத்திப் பேசிய, நிப்பான் பெயிண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மகேஷ் எஸ்.ஆனந்த். அவர் பேசும்போது, “நிப்பான் பெயிண்ட் எப்போதுமே பெயிண்ட் தொழில்துறையில் புரட்சிகளை செய்வதில் கவனத்தை செலுத்துகிறது. மேட்டெக்ஸ் ஈஸி வாஷ் -ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் இல்லத்தின் உட்புற அழகை எப்படியெல்லாம் மேம்படுத்த விரும்புகின்றனரோ அதற்கு ஏற்றவாறு எல்லாம் புதுமைகளைப் புகுத்தியுள்ளோம். எளிதில் கழுவி சுத்தப்படுத்துவதே இதன் சிறப்பம்சம்.

இந்த புதிய ரக பெயிண்ட் சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் இதன் விலை கையடக்கத்தில் இருக்கிறது. இது நவம்பர் 19 முதல் சந்தையில் கிடைக்கிறது. நிப்பான் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர் பார்டனர்களிடம் இதனைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு www.nipponpaint.co.in/ என்ற இணையதளத்தை அறியலாம்.
#Nippon #Medex #EasyWash #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader