IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நிப்பான் பெயிண்ட் அறிமுகப்படுத்தும் BREEZE STAR இன்டீரியர் எமல்ஷன்

Get real time updates directly on you device, subscribe now.

சிறந்த மின்னொளி (ஷீன்) அம்சத்துடன் கூடிய பெயிண்டை கட்டுப்படியாகும் விலையில் அறிமுகம் செய்துள்ளது

ஆசியாவின் முன்னணி பெயிண்ட் உற்பத்தியாளராகத் திகழும் நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், இன்று BREEZE STAR – என்னும் ஒரு சிறந்த மின்னொளி (ஷீன்) அம்சத்துடன் கூடிய இன்டீரியர் எமல்ஷன் பெயிண்ட் வகையை, மிகவும் கட்டுப்படியாகும் விலையில் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் புவியியல் அடிப்படையிலான ஆராய்ச்சிகள் மற்றும் புத்தாக்கங்களுக்கு நிப்பான் எப்போதும் முன்னுரிமை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஒரு சீரான மற்றும் உயர் மின்னொளி ஃபினிஷ் கொண்ட சுவர்களை, மிகச்சிறந்த கவரேஜ் உடன் வழங்கும் நோக்கில், இந்த BREEZE STAR உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெயிண்ட் 3 ஆண்டுகள் செயல்திறன் உத்தரவாதத்துடன் வெளிவருகிறது. ஒரு பிக்மெண்ட் காம்போசிஷன் அண்டு ரிச் பாலிமர் தொழில்நுட்பத்துடன், சுவர்களுக்கு அழகியல் தன்மைகளை வழங்கிடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும்BREEZE STAR ஒரு ஆரோக்கியமான உட்புற அமைவிடத்தை வழங்குவது, பெயிண்ட் செய்யப்பட்ட உடன் குடியிருப்பாளர்கள் உடனடியாக குடிபுகுவதை உறுதி செய்கிறது.

இப்புத்தாக்க பெயிண்ட், திரு. மகேஷ் S. ஆனந்த் – தலைவர், திரு. மார்க் டைட்டஸ் – இயக்குநர் மார்க்கெட்டிங், மற்றும் M. நடராஜ் – பொது மேலாளர் (தமிழ்நாடு விற்பனை), நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (அலங்கார பிரிவு)ஆகியோரால் மெய்நிகர் ரீதியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடுமையான சோதனைகள் மற்றும் பல ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட தொழில்துறை ஆராய்ச்சிகளின் அடிப்படையில், நிப்பான் பெயிண்ட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினர், இத்தயாரிப்பினை உருவாக்கியுள்ளனர்.

சந்தையில் இத்தகைய புரட்சிகரமான தயாரிப்பின் தேவையை வலியுறுத்திப் பேசிய, திரு. மகேஷ் S. ஆனந்த் – தலைவர் – நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (அலங்கார பிரிவு) அவர்கள், “புரட்சிகரமான தயாரிப்புகள் மற்றும் புத்தாக்கச் சேவைகளை உருவாக்குவதன் வழியாக, பெயிண்ட் தொழில்துறையில் ஒரு புரட்சியை மேற்கொள்வதை நிப்பான் பெயிண்ட் அதன் இலக்காக எப்போதும் கொண்டுள்ளது. BREEZE STAR அறிமுகத்தின் வழியாக, எங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு உயர் மின்னொளி ஃபினிஷை, கட்டுப்படியாகும் விலையில் வழங்க நாங்கள் விரும்பினோம். இந்த BREEZE STAR இன்டீரியர் எமல்ஷன், பல்லாண்டுகால சந்தை ஆராய்ச்சி மற்றும் கற்றல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் கட்டுப்படியாகும் தன்மை மற்றும் தனித்துவமிக்க வழங்குதல்கள் காரணமாக, இப்புதிய பெயிண்ட், சந்தையில் பெரும் வரவேற்ப்பினைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

படிப்படியாக மீண்டு வரும் சந்தையில், நிப்பான் பெயிண்டின் BREEZE STAR, வர்த்தக ரீதியில் 13 ஜுலை 2020 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட நிப்பான் பெயிண்ட் டீலர்களிடம் கிடைக்கப்பெறும். நிப்பானின் BREEZE STARகுறித்த கூடுதல் தகவவல்களுக்கு, பார்க்கவும். www.nipponpaint.co.in/

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader