IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஊரடங்கில் அசத்தும் மதுரை `மாத்தியோசி’ இளைஞர்

June 6, 2020
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் வகையில் தனது பணியைச் சற்று மாறுதலாகச் சிந்தித்து தனது தொழிலை மீட்டுவருகிறார் மதுரையைச் சேர்ந்த துரைராஜ். டி- சர்ட் பிரிண்டிங் தொழில் செய்யும் அவர் குழந்தைகளுக்கு பிடித்த கார்டூன் மாஸ்க்குகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

ராஜேந்திர பாலாஜிக்கு அதிர்ச்சி வைத்தியம்

June 6, 2020
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் சிலர், ‘ஆகஸ்ட் மாதம் சின்னம்மா சிறையிலிருந்து வந்துவிடுவார். அதற்குப் பிறகு முதல்வர் சில அதிரடிகளை அரங்கேற்றப் போகிறார்’ என்று கொளுத்திப்போட… தகவல் முதல்வர் தரப்புக்குச் சென்றுள்ளது. இந்த பிரச்னை தணிந்த பிறகு ராஜேந்திர பாலாஜிக்கு மட்டுமல்லாமல், மேலும் சிலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவிருக்கிறதாம்!’

உருக்குலைந்த சேமிப்புக் கிடங்கு! – ரஷ்யாவில் அவசர நிலை

June 6, 2020
ரஷ்யாவில் 20,000 டன் எண்ணை ஆற்றில் கலந்ததையடுத்து ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் அவசரநிலை பிறப்பித்துள்ளார். சைபீரியாவின் நோர்ல்ஸ்க் (Norilsk) நகரில் உள்ள நோர்நிக்கல் (Nornickel) ஆலையில் எரிபொருள் தொட்டி உருக்குலைந்ததே இதற்குக் காரணம் என்று கூறுகிறார் அந்த ஆலையின் இயக்குநர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

June 6, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,26,770லிருந்து 2,36,657 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,348லிருந்து 6,642 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,462லிருந்து 1,14,073 ஆகவும் அதிகரித்துள்ளது.

சசிகலா பக்கம் சாய்கிறாரா பன்னீர்செல்வம்?

June 6, 2020
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் போலப் புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை பரிதாப நிலைக்குத் தள்ளியிருக்கிறது காலம். ‘‘எந்த சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினாரோ… அதே சசிகலாவின் தலைமையைக்கூட ஏற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு இப்போது வந்துவிட்டார் ஓ.பி.எஸ்’’ என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஆபத்தில் இந்தியாவின் சூழலியல் பாதுகாப்பு

June 6, 2020
சூழலியல் சீரழிவுகளின் விளைவாகவே உருவாகி, அதனால் பரவியதாகக் கூறப்படுகிறது கொரோனா வைரஸ். ஆனால், `ஊரடங்கின் பொருளாதார இழப்புகளைச் சரிகட்டும் மத்திய அரசின் மறுநிர்மாணத் திட்டங்கள் மீண்டும் சுற்றுச்சூழலை அழிப்பதற்கே வழிவகுக்கின்றன’ என்று கவலை தெரிவிக்கிறார்கள் சூழலியாளர்கள்.

உலக அளவில் கொரோனா பாதிப்பின் முழு அப்டேட் நிலவரம்

June 6, 2020
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 68,44,705 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,35,399 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,98,141 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 19,65,708 ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,11,390 ஆக உயர்ந்துள்ளது.

ராணுவ வீரருக்கு அமைச்சர் இரங்கல்

June 6, 2020
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் சேலம், எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு கடுந்துயரடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அமைச்சர் எஸ். பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

June 6, 2020
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேகமூட்டங்களுடன் சாரல் மழை பெய்ததால் குத்தாலத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. ஊரடங்கு காரணமாக அருவிகளுக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சென்னையிலிருந்து புனே, அந்தமானுக்கு 350 பயணிகளுடன் செல்லவிருந்த 2 விமானங்கள் ரத்து

June 6, 2020
சென்னை விமானநிலையத்தில் இருந்து புனே,அந்தமானுக்கு 350 பயணிகளுடன் செல்லவிருந்த 2 விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளது. கோ ஏர்வேஸ், ஏர் இந்தியா விமானங்கள் ரத்தானதால் பயணிகள் தகராறு செய்து வருகின்றனர். முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்தானதால் மாற்று விமான பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader