IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்தியாவில் கொரோனா பாதிப்பு!

June 2, 2020
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,98,706 -ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 95,527 -ஆக உள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,598 ஆக உள்ளது.

அமெரிக்க நகரங்களில் ராணுவம்

June 2, 2020
நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு தலைவர் நான் தான். மக்கள் நலனுக்காக ஆளுநர்கள் போராட்டங்களைத் தடுக்க வேண்டும். இல்லை என்றால், ஆயிரம் ஆயிரம் ராணுவ வீரர்கள் நகரில் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவார்கள். நமது நாடு முழுவதும் பரவியுள்ள கலவரங்களையும், அராஜகங்களையும் நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம்’ என டிரம்ப் பேசியுள்ளார்.

இத்தாலியில் வைரஸ் வலுவிழந்துள்ளது

June 2, 2020
மருத்துவ ரீதியில் கொரோனா வைரஸ் இனி இத்தாலியில் இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மாதிரிகளை ஒப்பிடுகையில் தற்போது வைரஸ் அதிக அளவில் குறைந்துள்ளது. மீண்டும் இயல்புநிலைக்கு எங்கள் நாடு திரும்ப வேண்டும். இத்தாலியில் வைரஸ் பாதிப்பு குறைந்துவிட்டது’ என அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சிக்கிக்கொண்ட 700 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

June 2, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கு உத்தரவால் இலங்கையில் சிக்கிக்கொண்ட 700 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய 700 பேரும் இந்திய கடற்படை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வந்த நிலையில் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

தென்காசி புதிதாக இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

June 2, 2020
தென்காசி புதிதாக இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் மார்ச் மாத பஸ் பாஸ் ஜுன் 15 வரை பயன்படுத்தலாம்

June 2, 2020
மதுரை மண்டலத்துக்குட்பட்ட அரசு பேருந்துகளில் மார்ச் மாத பஸ் பாஸ் ஜூன் 15ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மதுரை மண்டல போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ரூ.1,000 பஸ் பாஸ் மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை பயன்படுத்த பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது

நாகர்கோவில் அருகே பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை

June 2, 2020
நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே உள்ள பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிவகுமார் என்பவருக்கு சொந்தமான பழக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை, மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சலூன், அழகு நிலையம், ஸ்பா நிலையங்களுக்கு செல்வோர் ஆதார் அட்டை அவசியம்

June 2, 2020
தமிழகத்தில் உள்ள சலூன்கள், அழகு நிலையம், ஸ்பா நிலையங்களுக்கு செல்வோர் ஆதார் அட்டை அவசியம் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, செல்போன், ஆதார் விவரங்களை பதிவேட்டில் குறித்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் கூடுதலாக 102% அதிகமாக பெய்யும்

June 2, 2020
தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் கூடுதலாக 102% அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் தற்போது 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அய்யர்பங்களா பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் பயங்கர தீ விபத்து

June 2, 2020
மதுரை மாவட்டம் அய்யர்பங்களா பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader