IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

திருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய மணமக்கள்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பல திருமணங்கள் மிகலும் எளிமையாக நடைபெறுகின்றன. இதில் தேனியை சேர்ந்த ராமலிங்கம் மற்றும் மதுமிதா ஜோடிக்கு தேனி பெத்தாச்சி விநாயகர் கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமண விழாவில் சொந்தபந்தங்கள், அக்கம் பக்கத்தினர் என எல்லோரையும் அழைக்க முடியாததால், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் மணமகன் வீட்டுக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பலர் மணமக்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது மணமக்களை வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு திருமண வீட்டின் சார்பாக கொடுக்கப்படும் தாம்பூல பைகளுக்கு பதிலாக மாஸ்க், சானிடைசர், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து அசத்தியுள்ளனர்.

இது குறித்து பேசிய மணமக்கள், ஊரடங்கால் அனைவரையும் அழைக்க முடியவில்லை. வழக்கமாக கொடுக்கப்படும் தாம்பூல பைகளுக்கு பதிலாக ஊரடங்கில் தவிக்கும் மக்களுக்கு உதவும் விதமாக சானிடைசர், மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுக்க முடிவு செய்தோம். தாம்பூல பைக்கு ஆகும் செலவை விட குறைவு தான். இப்படி கொடுத்தது எங்களுக்கு மன நிறைவாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader