IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரையில் அஜித் பெயரில் புதிய கட்சி! உள்ளாட்சி தேர்தலில் போட்டியா..?

248


தமிழ் சினிமாவில் தனக்கென்ன மாஸ் காட்டி மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் தல அஜித்குமார் ஒருவரே. அரசியல் ஆர்வம் இல்லாத ஒரே நடிகரும் அவர்தான். நடிப்பு மற்றும் தன்னுடைய பொழுதுபோக்குகளில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடியவர், தன்னுடைய பட புரோஷன் விழாக்களில் கூட கலந்து கொள்ள மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

இருப்பினும் அவ்வப்போது ஏதேனும் அரசியல் தலைவர்கள் அஜித்தை குறிப்பிட்டே பேசி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன் பாஜக மாநில தலைவர் அஜித் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம் என்றார். ஆனால் அஜித் அவரது பேச்சிற்கு ஆர்வம் காட்டவில்லை. அதேப்போன்று சமீபத்தில் கூட ரஜினி, கமல், விஜய் எல்லாம் அரசியலுக்கு வரும்போது அஜித் ஏன் வரக் கூடாது ? அஜித் மிகவும் நல்லவர். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் அஜித் அரசியலுக்கு வரவே வாய்ப்பில்லை என கருதப்பட்டது.

Related Posts
1 of 1,177

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை நகரில் அஜித் பெயரில் ஒரு புதிய கட்சி தொடங்கியிருப்பதாகவும், அஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியிருப்பதாகவும் மதுரை நகரில் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர் மற்றும் அஜித் புகைப்படங்கள் இருப்பதால் அவரது விசுவாசிகள் எவரேனும் ஒட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த பெயரில் உண்மையிலேயே கட்சி பெயரில் தொடங்கியிருக்கிறார்களா என்பது குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.