IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

புதிய ரக நெல் விளைச்சலை அறுவடை செய்த கலெக்டர்

12

பரமக்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட புதிய ரக நெல் அறுவடையை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்.

மகசூலை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் நோக்கிலும் பாபா அணு ஆராய்ச்சி நிலையம் சார்பில், பல்வேறு நெல் ரகங்கள் சோதனை முறையில் பயிரிடப்பட்டு வருகிறது.

இதன் படி 2019 ஜூலை 26ல் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பாபா ஆராய்ச்சி நிலையத்தால் வெளியிடப்பட்ட நெல், பயறு,எண்ணெய் வித்து பயிர்களின் ரகங்கள் குறித்து விஞ்ஞானி டேனியல் செல்லப்பா எடுத்துரைத்தார்.

தொடர்ந்து வளையனேந்தல் கிராமத்தில் 2019 செப்.,ல் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, டி.சி.சி.எம்.1 துப்புராஜ் என்னும் புதிய ரக நெல்லை தமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் செய்தார்.

பின்,பரமக்குடி ஒன்றியம் வளையனேந்தல் கிராமத்தில் முன்னோடி விவசாயி துரைராஜிடம் 5 கிலோ நெல்லை வழங்கி, ஆட்சியர் வீரராகவராவ் விதைதுாவி பணியை துவக்கி வைத்தார்.

பயிர்கள் 102 நாட்களில் வளர்ந்து நல்ல மகசூலை எட்டியுள்ளன. தானே விதை துாவி துவக்கிய பணியை நேற்று கலெக்டர் அறுவடை செய்தார்.

குறைந்த நாட்களில் வறட்சியை தாங்கி வளரும் புதிய ரகம் வெற்றிகரமாக பலன் தந்ததையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.