IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

டெல்லி பெண்ணுக்கு பாலியல் கொடுமை: 4 பேருக்கு ஆயுள் சிறை

159

 

டெல்லி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு கடந்த 2018ம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. இதையடுத்து 2018 டிசம்பர் 1ந்தேதி அந்த பெண் டெல்லியில் இருந்து ரயில் மூலம் கும்பகோணம் வந்தார். நள்ளிரவில் வந்திறங்கிய அவர், நகரில் உள்ள தங்கும் விடுதிக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணிடம் கூடுதலாக பணம் பறிக்க ஆசைப்பட்டு வேறு பாதையில் செட்டிமண்டபம் புறவழிச்சாலைக்கு சென்றுள்ளார்.
இதையறிந்த அப்பெண் கூச்சலிட்டதுடன்,ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். இதனால், பயந்து போன ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

 

Related Posts
1 of 2

இதையடுத்து, அப்பெண் தனது பையுடன் செட்டிமண்டபம் புறவழிச் சாலையில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த வசந்தகுமார் (24), அஞ்சுகம் நகரைச் சேர்ந்த தினேஸ்குமார் (25) ஆகியோர் அப்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் தனது நண்பர்களான மூப்பனார் நகரைச் சேர்ந்த புருசோத்தமன் (20), ஹலிமா நகரைச் சேர்ந்த அன்பரசன் (20) ஆகியோரையும் வரவழைத்துள்ளனர். அவர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமார், தினேஸ்குமார், புருசோத்தமன், அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தியும் (26) கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இவ்வழக்கில் நீதிபதி எம். எழிலரசி தீர்ப்பளித்தார். அதில் வசந்தகுமார், தினேஸ்குமார், புருசோத்தமன், அன்பரசன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், மரணமடைந்த பிறகே அவர்களது உடலை வெளியே கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றும், நான்கு பேருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 

#NewDelhi #Woman #sexually #abused