IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விதிமுறைகள் இன்று முதல்

Get real time updates directly on you device, subscribe now.

நாடு முழுவதும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகளை சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதன்படி பணவரம்பு தொடர்பான விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பான ரிசர்வ் வங்கி முறைகளை அறிவித்துள்ளது. செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007 இன் பிரிவு 10(2)-ன் கீழ் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள ஏ.டி.எம் மற்றும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரகளில் மட்டுமே உபயோகிக்க முடியும். வெளிநாடுகளில் பயன்படுத்த வங்கியில் அனுமதி பெற வேண்டும்.

பணம் பரிவர்த்தனை வரம்பை வாடிக்கையாளர்களே அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய சேவைகளை தேர்வு செய்வது, அல்லது விலகுவது, ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் உள்ளிட்டவற்றிற்கும் வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader