IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நான் தொழிலில் பலமுறை தோல்வி கண்டும், ஒருபோதும் துவண்டதில்லை – முகேஷ் அம்பானி

Get real time updates directly on you device, subscribe now.

“உங்கள் நிறுவன முதலீட்டாளர்களின் பணத்தை உங்கள் சொந்த பணத்தை விட கவனமாக காத்திடுங்கள். இரண்டாவதாக, ஒரு நல்ல குழு இல்லாமல் உங்களால் சாதிக்கவே முடியாது. இந்த இரண்டு முக்கிய அம்சங்களை தான் நான் பின்பற்றுகிறேன்…”

 

இப்படி அண்மையில் மும்பையில் நடைப்பெற்ற நாஸ்காம் தலைவர்கள் மாநாட்டில் சொன்னவர், உலகின் பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனர் மற்றும் வெற்றி தொழிலதிபர் முகேஷ் அம்பானி.

 

ஒரு தொழில்முனைவோராக தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட முகேஷ், தான் வெற்றி அடைய உதவிய முக்கிய ஃபார்முலாவை வரிசைப் படுத்தி பேசினார். தான் முதன்முதலில் முக்கியமான தொழில்முனைவு பாடங்களை தன் தந்தை மறைந்த திருபாய் அம்பானியிடம் கற்றதாக தெரிவித்தார்.

 

மிகப்பெரிய ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய திருபாய் அம்பானியின், மகனான முகேஷ் அம்பானி, அமெரிக்கா சென்று படித்துவிட்டு திரும்பிய போதே தொழில் பற்றிய தன் முதல் பாடத்தை தந்தையிடம் கற்றதாக பகிர்ந்தார்.

 

இந்தியா திரும்பிய முகேஷ், தந்தையிடம் ரிலையன்ஸ் நிறுவனத்தில் தான் என்ன பொறுப்பை ஏற்கவேண்டும் என்று கேட்டபோது, அவர் தன்னை ஒரு ஊழியரை போல் பணிபுரியச் சொன்னார் என்றார்.

 

மேனேஜர் பொறுப்பேற்று நிறுவனத்தில் பணிப்புரிய சொன்னதே திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானிக்கு கொடுத்த முதல் உத்தரவு.

ஒரு தொழில்முனைவர் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை எப்படியும் கண்டெடுப்பார் என்று தந்தை திருபாய் மகனுக்கு சொல்லியுள்ளார். பிடிஐ செய்திகளில் குறிப்பிட்டுள்ள படி,

 

“ஒரு தொழில்முனைவர் தனக்கு பிடித்தமான விஷயத்தில் அடங்கியுள்ள பிரச்சனைகள் என்ன என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். வெறும் தீர்வு காண்பதல்ல தொழில், பிரச்சனையை கண்டுபிடித்து பின்னர் அதற்கு தீர்வு காண்பதே முக்கியம்,”

 

என்று முகேஷ அம்பானி கூறியுள்ளார். மேலும் விவரித்த முகேஷ், ஒரு பிரச்சனைக்கான தீர்வு சமூகத்துக்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருத்தல் வேண்டும்.

 

அந்த தீர்வை அளிக்கும் தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம் என்பது இரண்டாவதாக இருக்கவேண்டும் என்றார்.

 

வருமானம் மட்டுமே இலக்கு என்று தொழிலில் பயணிப்பது, உங்களின் ஆர்வம் மற்றும் கனவை நினைவாக்க தடையாக அமைந்துவிடும்.

 

ஒரு சிறந்த தொழில்முனைவராக, உங்களின் கனவு தாகத்தை முதலில் நீங்கள் தீர்த்து கொள்ளவேண்டும் என்றார்.

 

”மூன்றாவதாக நான் கற்ற முக்கியமான ஒன்று; சமூக மதிப்பை உருவாக்குவதே எங்களின் முக்கிய இலக்காக கொண்டு செயல்படுவது. இதையே நாங்கள் தற்போது ரிஐஎல்’ இல் செயல்படுத்திவருகிறோம்,” என்றார்.

 

தோல்விகளை பற்றி குறிப்பிடுகையில், தானும் பல சவால்களை, தோல்விகளை பலமுறை சந்தித்த பின்னரே வெற்றி அடைய முடிந்தது என்று பகிர்ந்தார்.

 

“தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள். அதிலிருந்து கற்றுக்கொண்டு விடாமுயற்சியாக போராடுங்கள்…”

 

ஒரு தொழிலுக்கு சரியான குழு எந்தளவு முக்கியம் என்று பேசிய அவர், “ஒரு குழுவை அமைப்பது கஷ்டமான காரியம். அதுவும் உங்கள் கனவுகளுக்கு கைக்கோர்க்கும் ஆர்வமுள்ள குழுவை தேர்ந்தெடுப்பது முக்கியம். அப்போதுதான் அவர்களும் உங்கள் கனவை நோக்கி பயணிக்கு உதவுவார்கள்.

 

இறுதியாக ஒரு தொழில்முனைவர் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவராக இருக்கவேண்டும். சுற்றியுள்ளோரின் ஏளனப் பேச்சுகள், எதிர்மறை எண்ணங்களை தாண்டி தொழில்முனைவோர் பாசிடிவ் எனர்ஜியை பொழிந்தால் மட்டும் வெற்றியாளராக ஆக முடியும் என்றார் முகேஷ் அம்பானி.

 

மதுரை சம்பந்தமான தகவல்கள் , செய்திகள் , நிகழ்ச்சிகள் , நிறுவனத்தின் வெற்றி கதைகள் , புகைப்படங்கள் இலவசமாக பதிவிட Click : http://in4madurai.com/quickpost/

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader