பார்வையற்ற பெண்ணாக மிரட்டும் நயன்தாராவின் நெற்றிக்கண் டீசர் வெளியீடு

Get real time updates directly on you device, subscribe now.

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் முதன்முறையாக தயாரிப்பாளராக களமிறங்கும் படம் நெற்றிக்கண். இந்தப்படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று நவம்பர் 18 நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெற்றிக்கண் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

படத்தில் நயன்தாரா கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். டீசர் முழுவதிலும் நயன்தாரா ஆக்ஷன் கதாநாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். மேக்கப் இல்லாத வித்தியாசமான தோற்றத்தில் நயன்தாராவை பார்க்க முடிகிறது.

சிலரை கடத்தி கொடுமை செய்யும் ஒருவன் நயன்தாராவின் வலையில் சிக்கி என்ன ஆகிறான் என்பது படத்தின் கதையாக இருக்கும் என டீசரில் தெரியவருகிறது. இதை ஆட்டுக்குட்டிகள், நரி என நயன்தாராவே கதை சொல்லும் விதத்தில் தெரிய வருகிறது.

இதற்கு முன்பு சித்தார்த், ஆன்ட்ரியா நடித்த அவள் படத்தை இயக்கிய மிலிந்த்ராவ் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். விக்னேஷ் சிவன் இந்தப் படத்தினை தயாரித்துள்ளார். படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் வெளியானதுமே இது 2011ல் கொரியன் மொழியில் வெளியான ‘பிளைன்ட்’ படத்தின் காப்பி என சர்ச்சை வந்தது. ஆனால், அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் நெற்றிக்கண் படம் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

#Nayanthara #HBDLadySuperstarNayanthara #NetriKannTeaser

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More