IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நேர்மறைதாக்கத்தை ஏற்படுத்துவதில் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் நெஸ்லே ஹெல்தி கிட்ஸ் திட்டம்!

Get real time updates directly on you device, subscribe now.


நெஸ்லே இந்தியா நிறுவனம், அதன் மிக முக்கிய முனைப்புத் திட்டமான நெஸ்லே ஹெல்தி கிட்ஸ் திட்டம் 10 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை கொண்டாடுகிறது. பயனாளிகள் மத்தியில் ஊட்டச்சத்து மற்றும் நலவாழ்வு மீதான விழிப்புணர்வை அதிகரிப்பது மீது கூர்நோக்கம் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.


பயனாளிகளின் ஒட்டுமொத்தமுன்னேற்றத்திற்கு பங்களிப்பு வழங்குவதோடு, சமூகங்களில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும் நெஸ்லே ஹெல்தி கிட்ஸ் செயல்திட்டம் வகை செய்கிறது. அர்த்தமுள்ள வகையில் அவர்களின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிற அறிவை அவர்கள் பெறச் செய்வதன் மூலம் இதை இது சாத்தியமாக்குகிறது. 2009ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ப்பட்டு வரும் இத்திட்டமானது, நல்ல ஊட்டச்சத்து மிக்க, சிறந்த சமையல் நடைமுறைகள் நல்ல துப்புரவு ஆகியவற்றின் மீது விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் மற்றும் உடற்தகுதியை ஊக்குவிப்பதற்கும் உதவி வருகிறது. இத்திட்டமானது, இரு வழிமுறைகள் வழியாக செயல்படுத்தப்படுகிறது. ஆறு பிராந்திய பல்கலைக் கழகங்களுடனான கூட்டாண்மை செயல்பாடு மற்றும் மேஜிக் பஸ் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற என்ஜிஓ அமைப்புடனான ஒத்துழைப்பு என்பவையே இந்த வழிமுறைகளாகும்.


மாருதி சுசூகியின் மினி SUV S-PRESSO அறிமுகம்


கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் பள்ளி வருகையை 29 சதவீதம் அதிகரிப்பதற்கும், கை கழுவும் பழக்க வழக்கத்தை 18சதவீதம் உயர்த்துவதற்கும், பசுமை காய்கறிகள் நுகர்வை 37 சதவீதம் அதிகரிப்பதற்கும் மற்றும் குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று முறை பழங்கள் உட்கொள்வதை 18 சதவீதம் அதிகரிப்பதற்கும் இச்செயல் திட்டம் உதவியிருக்கிறது. தமிழ்நாடு மாநிலத்தில் மட்டும் ஏறக்குறைய 17000 பயனாளிகளின் வாழ்க்கை மீது ஆக்கப்பூர்வ தாக்கத்தை நெஸ்லே ஹெல்தி கிட்ஸ் செயல்திட்டம் ஏற்படுத்தியிருக்கிறது, என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


#Nestle #Healthy #Kids #Program

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader