IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நிலவில் கால் வச்சி 50 வருஷமாச்சி!

8


நிலவை காட்டி சோறு ஊட்டிய காலம் போய் இன்று நிலவிற்கே சென்று குடியேறும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. நிலாவில் காலடி வைத்து சாதனை நிகழ்த்திய 50ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு அடித்தளமி்டடவர் நீல் ஆம்ஸ்ட்ராங். இவர்தான் முதன்முதலில் நிலவிர் காலடி எடுத்து வைத்தவர்.


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969 ஜுலை 16-ல் அப்போலோ -11 என்ற விண்கலம் முதன்முதலாக நிலவுக்கு பயணமானது. இதில் நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் பைலட் மைக்கேல் கோலின்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.


இந்த விண்கலம் ஜுலை 20 நிலவில் இறங்கியது. 6 மணிநேரம் கழித்து நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கி காலடி வைத்தார். இதன் அடையாளமாக அமெரிக்க கொடியையும் , நிலவில் பறக்கவிட்டார். 20 நிமிடம் கழித்து எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினார். இச்சாதனை நிகழ்த்தி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று கடைபிடிக்கப்படுகிறது.