IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நீட் மதிப்பெண் இல்லாமல் ஃபிலிப்பைன்ஸில் மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கு

Get real time updates directly on you device, subscribe now.

நீட் மதிப்பெண் இல்லாமல் மாணவர் சேர்க்கை

பிலிப்பைன்ஸ் நாட்டில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகள், இந்த ஆண்டில் நீட் தேர்வு மதிப்பெண் இல்லாமலேயே எம்.பி.பி.எஸ். வகுப்பில் மாணவர் சேர்க்கையை அனுமதித்துள்ளது. இது குறித்த கருத்தரங்கு சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் சார்பில் மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடந்தது. கருத்தரங்கில் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். அங்கேயே பல மாணவர்கள் பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பங்கள் அளித்து, எம்.பி.பி.எஸ். வகுப்பில் தங்கள் இடங்களை உறுதி செய்து கொண்டனர்.

நீட் மதிப்பெண் இல்லாமல் சேர்க்கை-இதுகுறித்து லிம்ரா ஓவர்ஸீஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் முகமது கனி கூறுகையில், எம்.பி.பி.எஸ். படித்து முடித்த பின் இந்தியாவில் பிராக்டிஸ் செய்திட எழுத வேண்டிய எப்.எம்.ஜி. தேர்வு குறித்து மாணவர்கள் ஆர்வமாகக் கேள்வி கேட்டனர். லிம்ரா நிறுவனம் அதற்கான பயிற்சி வகுப்புகளை கட்டணம் எதுவுமில்லாமல் நடத்தி, 85% தேர்ச்சியினை அளித்துள்ளது.

பெற்றோர்கள் கல்விக் கட்டணம், விடுதி, உணவு, பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுப்பினர். மிகத் தெளிவாக ஆண்டு தோறும் செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு என விளக்கம் தரப்பட்டது. பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் உலகின் ஒரு சில மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் அதி நவீன டிஜிட்டல் கற்றல் சாதனங்கள் குறித்தும் விளக்கியபோது மாணவர்கள் ஆர்வத்துடன் அவை குறித்து கேட்டு ஆச்சரியப்பட்டு மனநிறைவு அடைந்தனர்.

கடந்த 18 ஆண்டுகளாக வெளிநாட்டுக் கல்விப் பிரிவில் இயங்கி வரும் லிம்ரா, கடந்த எட்டு ஆண்டுகளாக, பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகப் பிரதிநிதியாகச் செயல்பட்டு தமிழக, கேரள மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் பெற்றுத் தருகிறது. அனைவருக்கும் மருத்துவக் கல்லூரிகள், அவற்றின் சிறப்புகள், கட்டண விபரம், விடுதி மற்றும் தேவையான தகவல்கள் அடங்கிய குறிப்பேடுகள் தரப்பட்டன. இது குறித்து தகவல்கள் வேண்டுவோர் லிம்ரா நிறுவன நிர்வாகிகளை 9952923333 / 9445783333 எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader