2020 நீட் தேர்வில் ஆகாஷ் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் சாதனை

Get real time updates directly on you device, subscribe now.

மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் புகழ் பெற்ற ஆகாஷ் இன்ஸ்ட்டிடியூட் மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளனர். நேஷனல் டெஸ்ட் ஏஜென்சி (என்.டி.ஏ) நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் நாட்டின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான மதிப்புமிக்க நீட் தேர்வில் ஆகாஷ் பயிற்சி மையத்தில் படித்த மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கோவையை சேர்ந்த மாணவி ஜி.தங்கம் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 91 வது இடத்தையும் 720க்கு 700 மதிப்பெண்களையும், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் எம்.சிபிஷா அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 105 வது இடத்தையும் 720 க்கு 700 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் திருச்சி ஆகாஷ் இன்ஸ்ட்டிடியூட்டில் பயிற்சி பெற்றவர். மதுரை மாணவி பி.யாழினி 720 க்கு 695 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய தரவரிசைப் 174 ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியரை வாழ்த்திய ஆகாஷ் கல்விச் சேவைகளின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆகாஷ் சவுத்ரி கூறுகையில், “எங்கள் மாணவ, மாணவியர் நீட் 2020 நுழைவுத் தேர்வுவில் சிறந்து மதிப்பெண்களைப் பெற்றது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்த பெருமை அனைத்தும் அவர்களின் கடின உழைப்பு, பெற்றோரின் ஒத்துழைப்பு மற்றும் அவருக்கு வழிகாட்டிய ஆசிரியர்களையே சேரும். அவர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்”

மாணவ, மாணவியர் பேசுகையில் உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் நீட் தேர்வு சார்ந்த கடின உழைப்பு மற்றும் சிறந்த பயிற்சி வழங்கிய ஆகாஷ் பயிற்றுநர்களே தனது சாதனையின் பெருமைக்கு உரித்தவர்கள் என்றார். நீட் தேர்வு அனைத்து மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) மற்றும் வேறு சில படிப்புகளுக்கு சேர அவசியமாகும்.

நீட் 2020 இன் முதல் 3 தரவரிசை பட்டியலில் இருக்கும் ஆகாஷின் மாணவர்கள் வகுப்பறை மற்றும் தொலைநிலைக் கல்வி கற்றவர்கள் ஆவர். 15.97 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு பதிவு செய்த நிலையில் இது ஒரு அற்புதமான சாதனையாகும்.

Your Digital PR

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) குறித்து:

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வுகள், பள்ளி / வாரியத் தேர்வுகள், NTSE, KVPY மற்றும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்கத் தயாராகும் மாணவர்களை, விரிவான பயற்சி முறை மூலம் அத்தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் சேவைகளை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) வழங்குகிறது. “Aakash” பிராண்ட் தரமான பயிற்சி மற்றும் பல்வேறு மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகள், ஸ்காலர்ஷிப் தேர்வுகள் மற்றும் ஒலிம்பியாட் ஆகிய தேர்வுகளில் பெருமளவில் வெற்றிபெற்று படைத்த சாதனைகளுக்காகப் பிரசித்தி பெற்றது என்று AESL நம்புகிறது.

தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் சேவையில் 32 வருடச் செயல்பாட்டு அனுபவத்துடன் கூடிய இந்நிறுவனம் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகள் மற்றும் நுழைவு நிலை ஸ்காலர்ஷிப் தேர்வுகள் / ஒலிம்பியாட் தேர்வுகளில் வெற்றி பெற பல மாணவர்களுக்கு உதவியுள்ளது. 200க்கும் மேற்பட்ட ஆகாஷ் மையங்களுடன் (கூட்டு உரிமையாளர் உட்பட) இந்திய முழுவதும் சேவையாற்றும் இவ்வமைப்பில் 250,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.

பிரபல K-12 எட்டெக் பிராண்டான https://meritnation.com ஆகாஷ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். மேலும் விபரங்களுக்கு www.aakash.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

#aakashinstitute #neetscore #in4net

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More