IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நாம் கற்றுகொள்ள வேண்டிய நாகரிகங்கள்

84
  • அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர்கள். பண்ணவும் நினைக்காதீர்கள்.

  • முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்கள்

  • கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்.

  • பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் அதை செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள்.

  • பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக பொது இடம் மற்றும் சிக்னல்

  • நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாமே! அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள். அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்களின் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

  • கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருக்க வேண்டும்.

  • ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க கூடாது. அது கொஞ்சம் சைக்கோத் தனமாக இருக்கும். அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.

  • டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள். அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.

  • நீங்கள் ஓட்டுனராகவோ, அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc.. ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை கேட்காதீர்கள். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

  • ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.

  • நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு எனக்கு இந்த மாத்திரை வாங்கிட்டு வரியா.. என்று கடுப்பேற்றாதீர்கள்.

  • முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். நீங்க ரொம்ப shy டைப்பா? வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க..

  • நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள், பேசுங்கள்.. உங்களைப் பற்றி அல்ல.
    (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்…etc )

  • வயது, சம்பளம், விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் … தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் …

  • உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள்…

  • வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

  • புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல ‘ஸ்கொயர் பீட் எத்தனை ?’ என்று கேட்காதீர்கள். எங்க ஏரியாவில் கம்மி ரேட் ‘ என்றெல்லாம் சொல்லாதீர்கள்… ‘வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ‘ என்று முதலில் சொல்லுங்கள் …

  • ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் ‘பிரிக்கலாமா?’ என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . ‘ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே’ என்றெல்லாம் சொல்லாதீர்கள்.

  • பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி, உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள்..

  • இரவு 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம்.. 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம்.. நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் … 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் …

  • ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ, கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்

  • பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள். சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் …

  • ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள்
    ( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல )

  • டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்..

  • மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் …
    ( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ, இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!)

  • ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

  • குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் …ஏன் என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்..

  • நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

  • நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள். அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.


குறை, நிறை அனைவரிடமும் உண்டு …
நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம்…


குண்டா இருக்கீங்களா? அப்போ கொய்யாப்பழம் சாப்பிடுங்க!


#need #learn #Cultures