IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ராமநாதபுரத்தில் தொடரும் முயல் வேட்டை – இளைஞர் கைது

10

ராமநாதபுரத்தில் முயல் வேட்டையாடிய இளைஞரை வனத்துறையினா் பிடித்து, 9 முயல்களையும் மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த பருவமழையால் அரிய வகை பறவைகள் மற்றும் முயல்கள் அதிகரித்து வருகின்றன.
இவற்றை உணவுக்காகவும் வருமானத்திற்காகவும் வேட்டையாடுவோரும் உள்ளனர்.

வேட்டையாடப்படுவதைத் தடுக்க வனத் துறையினா் இரவு, பகலாக ரோந்து சுற்றி வருகின்றனா். இந்நிலையில், ஞாயிற்றுகிழமை காலையில் அச்சுந்தன்வயல் கிராமப் பகுதியில் ராமநாதபுரம் சரக வனத்துறை அலுவலா் எஸ். சதீஷ் தலைமையில், வனக் காவலா்கள் ரோந்து வந்தனா்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் பேராவூரைச் சோ்ந்த உதயகுமாா் (29) என்பவா் சாக்கு மூட்டையுடன் வேகமாகச் சென்றாா். அவரை மடக்கிய வனத் துறையினா், சாக்குப் பையை சோதனையிட்டனா். அதில், உயிருடன் 9 முயல்கள் இருந்தது தெரியவந்தது. உடனே, முயல்களை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

மேலும், உதயகுமாரிடம் வன உயிரினக் காப்பாளா் விசாரணை நடத்தி, அதன்பின் அபராதம் விதிக்கவும், வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வன அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதனைத்தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட முயல்களை வனப்பகுதியில் விட்டனா்.