முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளிகள் போகணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க!!

Get real time updates directly on you device, subscribe now.


அனைவருக்கும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆனால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அதற்கு தடையாக இருக்கும். நீங்கள் என்னதான் அழகாகவும், கலராகவும் இருந்தாலும் கூட உங்களது முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகளால் உங்களது அழகு குறைந்துதான் காணப்படும்.


மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலைகள் மற்றும் சில உணவு பழக்க வழக்கங்களால் பலருக்கும் முகப்பருக்கள் வருவதுண்டு. இந்த முகப்பருக்களை நீக்குவதற்கு சிலர் க்ரீம்கள் பயன்படுத்துவார்கள். சிலர் இயற்கை முறையில் சந்தனம், மஞ்சள் மூலம் நீக்குவார்கள். அப்படி எளிதில் முகப்பருக்களை நீக்கினாலும், முகப்பரு இருந்த இடத்தில் விழும் கரும்புள்ளிகள் அவ்வளவு எளிதாக முகத்தை விட்டு நீங்காது.


அப்படி விடாப்பிடியாக நம் முகத்தில் குடியிருக்க முயலும் கரும்புள்ளிகளை எளிதாக போக்குவதற்கு நீங்கள் அழகு நிலையம் செல்ல தேவை இல்லை. அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. கரும்புள்ளிகளை நீக்க பல இயற்கை முறைகள் உள்ளன. அதை நாம் வீட்டிலேயே செய்து பயனடையலாம். அவற்றில் சில எளிய முறைகளை இங்கே காணலாம்.


தக்காளி : தக்காளியின் சாற்றில் சிறிதளவு கடலை மாவு, சிறிதளவு தயிர், 3 துளி எலுமிச்சை சாறு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை வாரத்தில் 3 முறை தொடர்ந்து செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.


உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் மசாஜ் செய்வது போல தேய்க்க வேண்டும். அதன்பின் 10 நிமிடம் உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கும்


வாழைப்பழம் : நாட்டு வாழைப்பழத்துடன் சிறிது பால் கலந்து, நன்றாக மசித்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.


தேன் : சிறிதளவு பால் பவுடர் உடன் தேன் கலந்து வாரத்தில் 2 முறை முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொழிவுடன் காணப்படும்.


முல்தானி மட்டி : முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு அல்லது ரோஸ் வாட்டர் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி, காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் படிப்படியாக மறையும்.


தொகுப்பு: இ.நித்தியா

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader