12.1 C
Munich
Monday, October 3, 2022

இயற்கை அதிசியங்களில் ஒன்று பிளாக் வுட் மரம்

Must read

மத்திய ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா காடுகளில் வளரும் இந்த மரங்கள் பார்ப்பதற்கு சாதாரண மரங்களைப் போன்று காணப்பட்டாலும் மரங்களை வெட்டிய போது மிகவும் வலுவாகவும் கருப்பு நிறத்தில் காணப்படும்.

பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக சிறிய மரங்களைப் போன்று காணப்பட்டாலும் வறட்சியான இடங்களில் கூட மிகவும் செழுமையாக வளரும். 20 முதல் 30 அடி வரை வளரக்கூடியது.

இந்த மரங்கள் சிறிய செடிகள் பருவத்தில் காணும் போது இதன் தண்டு மற்றும் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.


இது பெரிதாக வளர வளர பழுப்பு நிறம் மற்றும் கருப்பு நிறத்தில் மாறும். இதற்காக தனியாக தண்ணீர் ஊற்றியெல்லாம் வளர வைக்க வேண்டியதில்லை.

எந்தவகை மரங்களாக இருந்தாலும் நோய் ஏற்பட்டால் மரம் பட்டுபோய் இலைகள் உதிர்ந்து காணப்படும். ஆனால் இந்த பிளாக் வுட் மரம் அப்படியில்லை.

எந்த சூழ்நிலையிலும் அதனை எதிர்த்து நின்று வளரக்கூடியவை. இந்த மரத்தை சில வகை பூச்சிகளுக்கு மிகவும் பிடிக்கும். இருப்பினும் அதனை தாங்கிக் கொண்டு கம்பீரமாக வளரும்.

பிளாக் வுட் மரங்களின் பயன்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது. பின்பு ஆப்பிரிக்கா மக்கள் இந்த மரங்களை பயன்படுத்தி வீடுகள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.

இதை பார்த்த மற்ற நாட்டு மக்கள் பெயிண்ட் கூட அடிக்காமல் கருகருவென இருக்கும் இந்த மரங்களை பற்றி ஆராயத் தொடங்கி வெளி உலகிற்கும் அறிமுகப்படுத்தினர்.

மற்ற மரங்களைப் போன்று இல்லாமல் பிளாக் வுட் மரங்களின் உறுதித்தன்மை மிகவும் வலுமையாக காணப்படும். மற்ற மரங்களைப் போல பிளாக் வுட் மரங்களை வெட்டி விட முடியாது.

உள்ளுக்குள் பிளவுத்தன்மை இல்லாமல் கெட்டித்தன்மையுடன் காணப்படுவதால் மிகவும் போராடி தான் வெட்ட முடியும்.

இயற்கையாகவ கருப்பு பெயிண்ட் அடித்தது போல் காணப்படுவதால் மியூசிக் உபகரணங்கள் மற்றும் பர்னிச்சர் போன்ற பொருட்களை செய்வதற்காகவே இது அதிகமாக பயன்படுகிறது.

அதனால் இந்த மரங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மிகவும் வலுமையான மரம் என்பதால் மெட்டல் பொருட்களுடன் இணைத்து நிறைய சாதனங்கள் செய்யப்படுகின்றன.

இதனால் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் இந்த மரங்கள் அதிகமாக உபயோகப்படுகின்றன.

ஆப்பிரிக்கா பிளாக் வுட் மரங்களை வெட்டி செதுக்கும் போது லேசாக வாசனை திரவியம் போன்று வாசனை வரும். பொருட்கள் செய்த பிறகு கூட அந்த வாசனை வரும் என்கின்றனர்.

பிளாக் வுட் மரங்கள் ஆப்பிரிக்காவில் மட்டும் தான் வளரும் என்பதாலும் மிகவும் மெதுவாகத் தான் வளரும் என்பதால் விலையும் அதிகம், இதன் தட்டுப்பாடும் அதிகம்.

இயற்கையாகவே கறுப்பு பெயிண்ட் அடித்தது போல் காணப்படும் பிளாக் வுட் மரங்கள் கிட்டார் செய்வதற்காகவும் கலைநயம் மிக்க பொருட்கள் செய்வதற்காகவே அதிக விலை கொடுத்து வாங்கி பொருட்கள் செய்யப்படுகின்றன.

இதனால் இதன் விதைகளை கொண்டு வந்த நிறைய இடங்களில் வளர்க்கலாம் என பிளான் செய்தனர். ஆனால் அது ஒன்றும் நடைபெறவில்லை.

நிறை இருந்தால் குறை ஒன்று இருப்பது போல் இந்த மரங்களை உபயோகப்படுத்தி வந்தால் சில அலர்ஜி பிரச்சனைகள் ஏற்படுமாம். மூச்சுக்குழல் எரிச்சல், கண் எரிச்சல் மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படுமாம்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article