IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இயற்கை முறையில் விளைந்த 110கிலோ பெருவள்ளிக் கிழங்கு

Get real time updates directly on you device, subscribe now.

 

இயற்கைமுறையில் விளைந்த 110 கிலோ எடையுள்ள பெருவள்ளிக்கிழங்கு உழவர்சந்தைக்கு விற்பணைக்கு வந்தது.

புதுச்சேரி மாவட்டம் திருபுனவனையை சேர்ந்தவர் சீனுதயாளன். இவர் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். இவர் தனது நிலத்தில் விளைந்த காய்கறி, பழ வகைகளை உழவர்சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம்.

இவரது தோட்டத்தில் விளைந்த வள்ளிக்கிழங்கை விற்பனைக்கு கொண்டு வந்தார். 110 கிலோ எடை கொண்ட அந்த வள்ளிக்கிழங்கு பிரம்மாண்டாமாக இருந்தது. உழவர்சந்தைக்கு வந்தவர்கள் இந்த கிழங்கை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

வள்ளிகிழங்கு குறித்து சீனுதயாளன் கூறியதாவது : இந்த கிழங்கு எனது தோட்டத்தில் இயற்கை விவசாயம் மூலம் விளைந்தது ஆகும். இது ஒருவருட பயிராகும் ஒரே கொடி 5 கிளைகளாக பிரிந்து கிழங்கு கிடைத்துள்ளது. இது ஆலவள்ளி, பெருவள்ளி, பூத வள்ளி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.

#Naturally #110kg #peruvalli #kilagu

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader