IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இயற்கை அழகு குறிப்புகள்….!

85

* வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

* வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

* வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஓட்ஸ்யை தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால், உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.

* எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.

* புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாக இருக்கும்.