IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் – திமுக எம்பி ஆர் .எஸ் பாரதி சாதி ரீதியான பேச்சு

Get real time updates directly on you device, subscribe now.

தலித் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்நாடு தூய்மை பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கக் கோரி மனு வழங்கப்பட்டது.

இந்த மனுவில் சென்னையில் கலைஞர் வாசகர் வட்டத்தில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி திமுகவின் அமைப்புச் செயலாளரும் எம்பியுமான ஆர் .எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தலித் மக்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டது திமுக போட்ட பிச்சை எனவும் தாழ்த்தப்பட்ட மக்களை ஹரிஜன் எனவும் கூறி கேவலமான முறையில் பேசினார். இதற்கு தாழ்த்தப்பட்ட, தலித் அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை கோவை மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆர். எஸ் பாரதிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது .

ஆர்.எஸ் பாரதி மீது போலீசில் புகார் அளித்தும் வெகு நாட்களுக்கு பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இவர் உடல்நலக்குறைவு, வயதானவர் என கூறி ஜாமீன் பெற்றார். ஆனால் திமுகவின் பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார். மத்திய எஸ்சி எஸ்டி ஆணையம் சட்டப்பிரிவு 338 படி ஆர்.எஸ் பாரதி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டுள்ளது.

வரும் 15 நாட்களுக்குள் ஆர்.எஸ் பாரதி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விபரங்களை தெரிவிக்க வேண்டும் என எஸ்சி எஸ்டி ஆணையம் காவல்துறை தலைவருக்கு (டி.ஜி.பி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆர்.எஸ் பாரதி மீது இனியாவது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

முண்டாசுக் கவிஞர் பாரதியார் காக்கை குருவி எங்கள் ஜாதி என பெருமிதத்துடன் பாடினார். அந்த மகாகவியின் பெயரை வைத்துள்ள ஆர் .எஸ் பாரதி ஜாதி ஏற்றத்தாழ்வுகளை பேசி பிழைப்பு நடத்துகிறார். சாதி மறுப்பு, சமத்துவம் என பேசும் திமுகவினர் ஆர்.எஸ் பாரதியின் சாதிவெறி பேச்சை கண்டிக்காமல் விட்டதன் விளைவு எம்.பி தயாநிதி மாறனும் தாழ்த்தப்பட்ட மக்களை பொதுவெளியில் கேவலமாக பேசி அவமானப்படுத்தினார்.

மறுக்கப்பட்ட நிதிக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் ‘மடியேந்தி மன்றாடி’ போராடிக் கொண்டிருக்கிறோம். நீதி நியாயம் இருந்தால் எங்கள் மக்களின் மன குமுறலுக்கு விடிவு கிடைக்கும். எஸ்சி எஸ்டி ஆணையத்தின் நடவடிக்கை ஜாதி ஆணவப் பேச்சுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader