சந்திரனில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு நீர் பரப்பு! நாசா கண்டுபிடிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

நிலவின் தென் துருவ பகுதியில் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு நாசா விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை தூண்டியுள்ளது.

பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட நேச்சர் வானியல் இணைய இதழ் கடந்த இருதினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகளில், சந்திரனில் முன்பு நினைத்ததை விட அதிகமான நீர் இருக்கக்கூடும் என்று கூறினர்.

ஆனால் அதற்கு முந்தைய ஆராய்ச்சிகளில் மேற்பரப்பை ஸ்கேன் செய்வதன் மூலம் நீரின் அறிகுறிகளை இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆனால் இவை நீர் (H2O) மற்றும் ஹைட்ராக்ஸைல் ஆகியவற்றுக்கு இடையில் வேறுபடுத்தி அறிய முடியவில்லை.

அகச்சிவப்பு வானியல் (சோஃபியா) வான்வழி தொலை நோக்கிற்கான ஸ்ட்ராடோஸ்பெரிக் ஆய்வகத்தின் தரவைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் சந்திர மேற்பரப்பை முன்பு பயன்படுத்தியதை விட மிகவும் துல்லியமான அலைநீளத்தில் ஸ்கேன் செய்தனர். இதிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தற்போது அங்கு நீர் இருப்பதாக இருந்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின்படி நிலவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால் எதிர்காலத்தில் அவை மக்களின் அடிப்படை தேவையாக பயன்படும் குடிநீராகவும், எரிபொருளாகவும் அதை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More