இந்திய பிரதமர் என்பவருக்குத்தான் மரியாதையை தவிர பிரதமர் மோடிக்கு இல்லை என்று இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பழைய வீடியோ ஒன்றை காங்கிரசார் வைரலாக பரவச் செய்துள்ளனர்.
பிரதமர் மோடியை தவிர இந்தியப் பிரதமர்களுக்கு மரியாதை இல்லை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் பாரதீய ஜனதா தளம் கட்சியினருக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் என்று கூறி ராஜீவ் காந்திக்கு அமெரிக்க பிரதமர் கொடி பிடித்துச் செல்லும் பழைய வீடியோ ஒன்றை வைரலாக பரவி வருகிறது.
மோடி பிரதமர் ஆவதற்கு முன்பே இந்தியா இருந்தது. மேலும் அது இப்போது இருப்பதைவிட சிறப்பானதாகவும், உலக அரங்கில் பெரும் மரியாதைக்குரியதாகவும் இருந்தது என்பதே வரலாற்று சாட்சியாகும்.

34 ஆண்டுகளுக்கு முன்பு 1985ம் ஆண்டு அன்றைய தினத்தில் இந்திய பிரதமராக ராஜீவ் காந்தி அமெரிக்க சென்றிருந்த பொழுது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது. அந்த வீடியோவில் அவருக்கு குடை பிடித்து கார் வரை சென்று வழியனுப்பியவர் அன்றைய தினத்தில் அமெரிக்க பிரதமராக இருந்த ரொனால்ட் ரீகன் தான்.
தற்போது காரணமே இல்லாமல் காங்கிரஸார் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். பிரதமர் மோடிக்கு உலகளவில் பெரும் மரியாதை கிடைப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸார்கள் இந்த மாதிரி வீடியோவை பரப்பி வருகின்றனர் என நெட்டிசன்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
#RajivGandhi #RonaldReagan #In4Net #Thepresident