IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காஷ்மீரில் இனி ஆடலாம், பாடலாம் – பிரதமர் மோடி அனுமதி

9


காஷ்மீரில் திரைப்பட சூட்டிங் நடத்த தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி , நாட்டு மக்களிடம் பேசும் போது, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு என் வேண்டுகோள், இனி காஷ்மீரில் எந்த பயமின்றி, தடையில்லாமல் நீங்கள் சூட்டிங் நடத்தலாம். அதனால் காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்றும் சுற்றுலாத்துறையும் வளர்ச்சி பெறும்.


ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் பல்வேறு வகையான மூலிகை பொருட்களுக்கு பெயர் போனது. ஆகவே இவற்றை அடையாளம் கண்டு அதிகளவில் பிரபலப்படுத்தினால் உலக சந்தையில் இப்பொருட்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டி தரமுடியும். இளைஞர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு அரங்கள் அமைத்து தரப்படும். விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.


புதிதாக தொழில் தொடங்குவோர் காஷ்மீர் இளைஞர்களின் வாழ்வை மனதில் கொண்டு இங்கேயே ஆரம்பிக்கலாம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் அன்பும், ஆதரவும் கிடைக்க வேண்டும் என்றார் மோடி.


தயாரிப்பாளர்களுக்கான பிரதமர் மோடியின் அழைப்பு, இனி வரும் காலங்களில் கட்டிடக்கலை இன்ஜினியர்களோ அல்லது ரியல் எஸ்டேட் அதிபர்களே கூட காஷ்மீரக்கு வரச்சொன்னால் கூட ஆச்சரியமில்லை என்கின்றனர் சமூக நலவிரும்பிகள்.