தெலுங்கில் நானிக்கு ஜோடியாக அறிமுகமாகும் நஸ்ரியா

Get real time updates directly on you device, subscribe now.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு படங்களில் நடித்துவந்தவர் நடிகை நஸ்ரியா நஷீம். அதன்பிறகு கடந்த 2010ம் ஆண்டு நிவின் பாலிக்கு ஜோடியான தமிழில் நேரம் என்னும் படத்தில் அறிமுகமானார்.

அதன்பின்னர் ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா, பெங்களூர் டேஸ் உட்பட சில படங்களில் நடித்து வந்தார். சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் போதே மலையாளத்தில் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆன 6 வருடங்களில் வரதன், கும்ப்ளங்பி நைட்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்த நஸ்ரியா, பகத் பாசிலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ட்ரான்ஸ் என்ற படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

இந்நிலையில் நஸ்ரியா முதன்முறையாக தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ், மலையாளப் படங்களில் மட்டுமே நடித்திருந்த நஸ்ரியா முதல்முறையாக தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இன்று இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. Ante sundhariniki என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தெலுங்கின் பிரபல இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More