IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நம்ம மதுரை என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் கிட்டதான்

Get real time updates directly on you device, subscribe now.

 

பொது மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் தூய்மை பாரதத்தை வலியுறுத்தி *நம்ம மதுரை” என்ற தலைப்பில் பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொள்ளும் கிட்டாத்தான் எனப்படும் மாரத்தான் ஒட்டம் மற்றும் நடைபயணம் நடை பெற்றது.

500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொள்ளும் கிட்டாத்தானை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது துணைவியார் ஜெயந்தி மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றியும் கொடி அசைத்தும் துவக்கி வைத்தனர்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இருந்து புறப்பட்ட மாணவ – மாணவிகளின் கிட்டாத்தான் நடைபயணம் உலக தமிழ் சங்கம், ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர் வழியாக மீண்டும் காந்தி மியூசியத்திற்கே வந்தடைந்தது.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “தூய்மையான நகராக மதுரையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, வைகையில் கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, தமிழக மக்களுக்கு எதிரான எந்த விரோத செயலையும் தமிழக முதல்வர் தடுப்பார். மேலும் ஜி.எஸ்.டி வரி தொடர்பான குறைபாடுகள் தமிழக அரசின் கோரிக்கையால் சரி செய்யப்பட்டது, பட்ஜெட் என்பது ரகசியமாக தயார் செய்யப்படுவது.

மத்திய பட்ஜெட் வந்த பின்னர் தான் சாராம்சங்கள் தெரியும், மத்திய அரசு வழியே தமிழகத்திற்கு பாதிப்புகள் வந்தால் தமிழக முதல்வர் ஏற்றுக்கொள்ள மாட்டார், கொரானா வைரசால் தமிழக மக்கள் அச்சம் அடைய தேவையில்லை, தமிழகத்தில் கொரானா வைரஸ்சை தடுக்க அனைத்து முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கொரானா வைரஸ்சால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 20 வது இடத்தில் உள்ளது” என கூறினார்.

 

#namma madurai #function #school #students #participate

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader