IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதி நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு!

5

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதி நளினிக்கு மேலும் 3 வாரங்களுக்கு பரோல் நீட்டித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.


லண்டனில் தங்கியிருக்கும் மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்துவைக்க 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்குத் தொடர்ந்தார். கடந்த மாதம் நடைபெற்ற அந்த மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் ஒரு மாதம் மட்டும் பரோல் வழங்கியது.


வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்த நளினி சத்துவாச்சாரியில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த நிலையில், “வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் இந்தியா திரும்பிய பிறகே மகளுக்கான மாப்பிள்ளையை முடிவு செய்வோம். எனவே, மேலும் ஒரு மாத காலத்துக்கு பரோலை நீட்டிக்க வேண்டுமென்று” நளினி தரப்பில் முறையிடப்பட்டது. இன்று நடைபெற்ற அந்த மனு மீதான விசாரணையில், 3 வாரம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.