IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மகளின் கணவனை திருமணம் செய்து கொண்ட தாய்!

Get real time updates directly on you device, subscribe now.

என்னுடைய அம்மா தான் என் கணவருக்கு மனைவி என போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவலை பெண் ஒருவர் கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்த போலீசார் குழம்பியுள்ளனர்.

கன்னியாகுமரி களியக்காவிளை காஞ்சாம் புறம் வயக்கலூரை சோ்ந்தவர் ரமேஷ் குமார்( வயது 39). இவருக்கு தக்கல் பகுதியை சேர்ந்த ப்ரீத்தி ( வயது 27) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷ்ணுதேவ் (வயது 9), சமஸ்கிருதி ஆர் நாயர் (வயது 4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் குமார் கடந்த 2017-ம் ஆண்டு கேட்டரிங் வேலைக்காக வெளிநாடு சென்றார்.

இவர்களின் திருமணம் 2009-ம் ஆண்டு ப்ரீத்தியின் தாயாரின் விருப்பப் படியே பாறைச்சாலை பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். இந்த திருமணத்தில் ப்ரீத்திக்கு விருப்பமில்லையாம்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து ரமேஷ் குமார் வந்துள்ளார். அவரிடம் ப்ரீத்தி தான் தனியாக வாழபோவதாக கூறி, கணவரிடம் குழந்தைகளை விட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். ரமேஷ் மனைவி ப்ரீத்தியை காணவில்லை என குழித்துறை மகளிர் காவல்நிலையம் மற்றும் தக்கலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் ப்ரீத்தியை தேடி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணையில் ப்ரீத்தி கூறியதாவது:- எனக்கு திருமணம் செய்து வைக்கும் போது எனக்கு வயது 15 தான். எனது அம்மாவின் கட்டாயத்தினால் மட்டுமே இந்த திருமணத்திற்கு ஒப்புகொண்டேன். நானும் என் அம்மாவும் பார்ப்பதற்கு அக்கா தங்கை போல் இருப்போம். இதனால் அவருடைய அடையாள அட்டையை வைத்து திருமணத்தை பதிவு செய்தனர். இது குறித்து ரமேஷ் குமாருக்கு சில மாதங்கள் கடந்த பிறகே தான் அனைத்து உண்மைகளும் தெரியும்.

இந்நிலையில் மூளமேடு பகுதியை சேர்ந்த அகில் (வயது28) என்பவருடன் கிறிஸ்தவ முறைபடி திருமணம் செய்து கொண்டேன். அவருடன் தான் வாழபோவதாகவும் கூறினார். ரமேஷ் குமாரை திருமணம் செய்து கொண்டது எனது அம்மா சிந்து தான். எனவே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால் என் அம்மா மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் ரமேஷ்குமாருடன் சட்டத்துக்கு விரோதமாக நான் இரண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளதால் அந்த குழந்தைகளை முறைப்படி ரமேஷ்குமாருடன் ஒப்படைத்து விட்டேன் என்றார். இவர் கூறிய பதிலில் போலீசார் குழம்பி உள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader