IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பிளாட்பாரத்தில் மோதி பைக்கில் சென்ற நர்ஸ்; பலி

Get real time updates directly on you device, subscribe now.

 

நாகர்கோவிலில் பைக்கில் சென்ற நர்ஸ்;, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது பிளாட்பாரத்தில் மோதி உயிரிழந்தார்.
நாகர்கோவிலை அடுத்த தக்கலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி ஸ்டெல்லா ராணி (38). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ்-ஆக வேலை பார்த்து வந்தார். தினமும் வீட்டில் இருந்து பைக்கில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று காலை வழக்கம் போல் தனது பைக்கில் வேலைக்கு கிளம்பியவர், நேரமாகி விட்டதால் வழக்கத்தை விட வேகமாக பைக்கை ஓட்டியுள்ளார். பார்வதிபுரம் மேம்பாலத்திற்கு கீழே வந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் சரிக்கி விழுந்ததுடன், நிலை தடுமாறி பிளாட்பாரத்தில் போய் மோதி உள்ளார். மோதிய வேகத்தில் தலையில் மாட்டியிருந்த தலைகவசம் கழன்று விழுந்துள்ளது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஸ்டெல்லா மேரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#nagarkovil #bike #accident #nurse #death

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader