IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சாவிலும் இணைபிரியாத அண்ணன் தம்பி

Get real time updates directly on you device, subscribe now.

அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பியும் பரிதாபமாக இறந்தார். இருவரது உடல்களும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் மதிவாணன். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவருடைய தம்பி பன்னீர்செல்வம் கூலி தொழிலாளி. பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பன்னீர்செல்வத்தின் உடல் நிலை மோசமாக இருந்ததால் உயிர் பிழைக்க இனி வாய்ப்பு இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். அதனால் அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு உறவினர்கள் அழைத்து வந்தனர். மதிவாணன் தம்பி இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்ததும் மிகுந்த கவலைக்கு உள்ளானார்.

இந்நிலையில் மதிவாணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் பதறி கொண்டு அவரை எழுப்பினார்கள். ஆனால் மதிவாணன் இறந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் படுக்கையில் இருந்த பன்னீர்செல்வம் தனது அண்ணன் உடலை பார்த்து கதறி அழுதார். ஏற்கனவே உடல் நிலை சரி இல்லாதநிலையில் இருந்த பன்னீர்செல்வமும் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

வாழ்வில் இணை பிரியாமல் இருந்த அண்ணன், தம்பி இருவரும் சாவிலும் ஒன்றாக இறந்ததை கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் இருவரது உடலுக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு ஒரே இடத்தில் தகனம் செய்தனர்.

#nagai #brothers #death

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader