IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உலகப்புகழ் பெற்ற தசராவிழா கோலாகலமாக இன்று துவக்கம்

4


உலகப்புகழ் பெற்ற தசாரவிழா மைசூரில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. விழாவிற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் அனைத்தும் நேற்று நடந்தன.


தசாரவிழா சாமுண்டி மலையில் இன்று காலை 9.39 மணியளவில் இலக்கியவாதியும், நாலாசிரியருமான எஸ்.எல்.பைரப்பா சாமூண்டிஸ்வரிக்கு மலர் தூவி விழாவினை துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் நேற்று மைசூரு புறப்பட்டு சென்றார். விழாவில் கர்நாடக மாநில அமைச்சர்கள், மைசூரு மன்னர் வம்சத்தினர் உட்பட முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.


மைசூரில் விழாவினை முன்னிட்டு நகர் முழுவதும் சுமார் 8000க்கு அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று வாரவிடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனை கருத்தில் கொண்டு, நகரில் மக்கள் அதிகநடமாட்டம் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே சோதனை சாவடிகளும், காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப திறந்தவெளி பஸ் சேவை, குதிரை வண்டிகள் இயக்கப்படவுள்ளது. மக்களின் நலனுக்காக ஆங்காங்கே மருத்துவ உதவிமைய சென்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. விழாவினில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காதபடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
#DasaraFestival #Mysore #In4Net #2019