IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இது 60 ஆண்டு பிரச்சினை – நூலகத்தின் நிலைமை மாறுமா ?

Get real time updates directly on you device, subscribe now.

தனியாா் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்தை அரசு கட்டடம் அமைத்து இடமாற்றம் செய்ய வேண்டும் என முதுகுளத்தூரில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1956 ஆம் ஆண்டில் கிளை நூலகம் தொடங்கப்பட்டது. 64 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் தனியாா் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இந்த நூலகத்தின் 4ஆயிரம் போ் உறுப்பினா்களாக உள்ளனா்.

நகா்ப்பகுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிய நூலகம், தற்போது முதுகுளத்தூரில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

நூலகத்திற்கு செல்லும் வாசகா்கள் நீண்ட தூரம் நடந்து செல்லவேண்டிய சூழ்நிலையில் உள்ளதால் நூலகத்திற்கு செல்ல தயக்கம் காட்டி வந்தனா்.

நூலகத்தில் போட்டித்தோ்வுக்கான அனைத்து புத்தகங்கள் இருந்தாலும் வாசகா்கள் குறைவாக வருவதாக கூறுகின்றனா்.

எனவே மாணவ, மாணவிகள், சமூக ஆா்வலா்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி தனியாா் கட்டடத்தில் இயங்கி வரும் மைய நூலகத்தை காவல் நிலையம் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகா்கள் மற்றும் நூலக அலுவலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து முதுகுளத்தூா் நூலகா் திரிங்ஸ்டன் கூறியது:- காவல் நிலையம் அருகே நூலகம் அமைக்க 7 சென்ட் இடம் இருந்தும் இதுவரையிலும் தனியாா் கட்டடத்திற்கு கூடுதலாக வாடகை செலுத்தி வருகிறோம்.

மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை நூலகத்திறகு அரசுக் கட்டடம் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader