IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆறுபடைவீடுகளில் தைப்பூசத் திருவிழா

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறும். மேலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக தைபூசத்தை கொண்டாடுகின்றனர்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் மூலம் உருவானவர் முருகப்பெருமான். அன்னை பார்வதி தேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.

அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

தைப்பூசம் பெரும்பாலும் பவுர்ணமி நாளன்றே வரும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடங்குதல் போன்றவற்றை செய்து வைப்பார்கள். மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கு கின்றனர். பின்னர் ஆறுபடை வீடுகளில் பக்தர்கள் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். இது தவிர முருகனின் பக்தர்கள் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.

#Murugan #Thaipoosam #festival 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader